12270 – கிராமோதய சபை கைந்நூல்.

உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு. கொழும்பு: உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்).

viii, 68 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கௌரவ ஆர்.பிரேமதாசா இலங்கையின் பிரதம மந்திரியாகப் பணியாற்றிய வேளையில் சிங்களப் பிரதேசங்களில் கிராமோதய சபைகள் அறிமுகப்படுத்தப் பட்டன. அத்திட்டத்தை தமிழ்ப் பிரதேசங்களில் எடுத்துச் செல்லும் வகையில் இக்கைந்நூல் உருவாக்கப்பட்டது. அபிவிருத்தி முயற்சியில் அபிவிருத்தி சபைகளின் பங்களிப்பு, அபிவிருத்திச் சபைகளின் சட்டம், ஒழுங்கு விதிகள், என்பனவற்றின் தொடர்பு நோக்கில் சட்டத்தின்கீழ் வகுக்கப்பட்ட கிராமோதய சபைகள் பிரதேச சபைகள் ஆகியவற்றின் சட்டரீதியான நிறுவனசபை முறையீயன்ற சட்டகம், கிராமோதய சபை: கருமச் செயலாட்சி, தொழில் நோக்கம், மூலவளப் பதிவேடு ஒன்றினைத் தயாரித்தல், திட்டவமைப்பு, திட்டங்களின் செயற்பாட்டின் பொருட்டு ஒத்துழைப்பினை நாடல், உள்ளூர் மட்ட அபிவிருத்தித் தொழினுட்பவியல் புதுமாற்றம் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் கிராமோதய சபை வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத் தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31724).

மேலும் பார்க்க: 12226

ஏனைய பதிவுகள்