12271 – பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்தின் கைநூல்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம். கொழும்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 1வது பதிப்பு, நவம்பர் 1998. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).

(4), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

பண்டங்கள் சேவைகள் வரியானது 1996ஆம் ஆண்டின் 34ஆம் இலக்கச் சட்டத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு 1998 ஏப்ரல் 1ம் திகதியன்று நடைமுறைக்கு வந்தது. பண்டங்கள் சேவைகளின் உள்ளூர் நுகர்வு மீது அறவிடப்பட்ட பல்நிலை வரியொன்றான 1981இன் 69ஆம் இலக்க மொத்த விற்பனவு வரிச்சட்டத்தினை பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டம் மீள்விக்கின்றது. இந்நூல் பண்டங்கள் சேவைகள் வரிக்கான விரிவான வழிகாட்டலை வழங்குகின்றது. பண்டங்கள் சேவைகள் வரியினை விதித்தல், பதிவுபெறுதல், வரி விபரத் திரட்டும் வரிக் கணிப்பும், வரிக் கொடுப்பனவு, வரி மதிப்பீடு, மேன்முறையீடுகள், வரி அறவீடு, வரி மீளளிப்பு ஆகிய எட்டுஅத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பண்டங்கள் சேவைகள் வரி பிரிவுபடுத்தல் குறியீட்டு இலக்கங்கள் அட்டவணை உருவில் இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26963).

ஏனைய பதிவுகள்