உள்நாட்டு இறைவரித் திணைக்களம். கொழும்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு அரசாங்க அச்சுத் திணைக்களம்).
viii, 167 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.
இச்சிறு நூலானது இலாபங்கள் மற்றும் வருமானம் என்பவற்றின் வரிவிதிப்புத் தொடர்பிலான 1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் (1996ஆம் ஆண்டின் 16அம் இலக்க திருத்தச் சட்டத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டவாறாகவும்) முக்கிய ஏற்பாடுகளையும் 2000/2001 வரிமதிப்பாண்டு தொடர்பில் 2000ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் முக்கிய ஏற்பாடுகளையும் சுருக்கமாக விளக்குகின்றது. மேலும் திணைக்களத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கிடையிலான பணிகளின் பகிர்வு, அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்ற பல பயனுள்ள தகவல்களையும் இது உள்ளடக்கியுள்ளது. வரிசெலுத்துவோருக்கு அவருடைய வரிப் பொறுப்புடைமை தொடர்பிலான சட்டங்களை அறியத்தருவதே இச்சிறு நூலின் நோக்கமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36553).
மேலும் பார்க்க: 12964