எட்வின் பீ. ஹொய்ற் (ஆங்கில மூலம்), ந.சுரேந்திரன் (தமிழாக்கம்). கிளிநொச்சி: போர்ப்பறை வெளியீட்டகம், 1வது பதிப்பு புரட்டாதி 2004. (கிளிநொச்சி: அன்பு அச்சகம்).
303 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 560., அளவு: 22.5×15.5 சமீ.
நம்பிக்கையிழந்த நிலை, சாவுக்குத் தயாராதல், ஒழுங்கமைத்தல், இறப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு, சிறப்புத் தாக்குதல் படை, தயாராதல், ஏ – நடவடிக்கை நாள், படையை விரிவாக்குதல், எமது முயற்சியை இரு மடங்காக்க வேண்டும் அட்மிரல் ஒனிஷி, புதிய காலங்கள் புதிய வழிமுறைகள், சாவுக்கு…, வானில் மட்டுமல்லாது, வால்வெள்ளிகள் மேலெழுகின்றன, பிலிப்பைன்ஸ் வதங்கியது, புதுவாழ்வுக்கான வாய்ப்பு, சாவுக்குப் புதுவாழ்வு, B ரக வான்கலங்களின் வருகை, இவோ ஜிமாவில் கடும் சண்டை, சிதறிய நம்பிக்கை, யப்பானுக்கான சமர், யப்பானுக்கான சமர் 2, தற்கொடை பிரிகேட், இறுதித் தீர்க்கமான சமருக்கு முதல் நாள், ஒக்கினாவாவின் அழிவுக்கு முந்திய தோற்றம், ரென் கோ நடவடிக்கை, ரென் கோ நடவடிக்கை 2, தூய நாரையின் பறத்தல், பின்னுரை ஆகிய 28 அத்தியாயங்களில் இந்நூல் யப்பானின் தற்கொடைப் போராளிகளான கமிக்காசிகள் வரலாறு பற்றி விபரமாகப் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36756).