12276 – மணிமலர்: நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம்: கலாசார மண்டபத் திறப்புவிழா.

மலர்க் குழு. நீர்கொழும்பு: இந்து இளைஞர் மன்றம், கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்).

(264) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் (முன்னாள் இந்து வாலிபர் சங்கம்) தமது மணிவிழாவையிட்டு கட்டியெழுப்பிய கலாசார மண்டபத் திறப்புவிழாவன்று (3.7.1994 அன்று) வெளியிட்ட மணிமலர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இக் கலாச்சார மண்டபம் புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு, வத்தளை ஈறாக உள்ள பிரதேசங்களில் வாழும் இந்துக்களுக்கென்று திருமண மண்டபத்தோடு கூடிய கலாச்சார மண்டபம் ஒன்று இல்லையென்ற குறைபாட்டை நிவர்த்தி செய்திருக் கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14150).

ஏனைய பதிவுகள்