சரத் அமரசிறி (ஆங்கில மூலம்), சீரங்கன் பெரியசாமி (மொழிபெயர்ப்பாளர்). நுகேகொட: இலங்கை இயற்கை ஒன்றியம், 546/3, வட்ட மாவத்தை, கங்கொடவில, 1வது பதிப்பு, ஜுன் 2008. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்ட் டிசைனர்ஸ், இல. 3யு, பஹிரவகந்த வீதி).
xv, 155 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1944-02-5.
சரத் அமரசிறி எழுதிய Caring for Water என்ற நூலின் தமிழாக்கம். அறிமுகம், நீரின் பண்புகள், புவியில் நீர், இலங்கையில் நீர், நீரின் பயன்களும் தேவையான தரங்களும், நீர் மாசடைதல், நற்போசணை, முடிவுரையும் முன்னால் உள்ள சவால்களும் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் பூமியில் நீரின் பராமரிப்பு பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்குகின்றது. தெரிவுசெய்யப்பட்ட நூல்விபரக் கோவையொன்று மேலதிக வாசிப்பிற்காக நூலின் இறுதியில் பட்டியலிடப் பட்டுள்ளது. நூலுக்கான சுட்டியொன்றும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49701).