12281 – வன வளம்.

திருச்செல்வம் தவரத்தினம். கொழும்பு 12: பீனிக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், No. C.G.6, செபஸ்தியன் தொடர்மாடிக் குடியிருப்பு, புனித செபஸ்தியார் வீதி, குணசிங்கபுர, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

x, 132 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7226-00-2.

வனச்சூழலானது பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை உள்ளடக்குவதோடு சக்திச் சுற்றோட்டம், உணவு வட்டம், போன்றவற்றுடன் இயற்கை மற்றும் இரசாயனம் சார்ந்த செயற்பாடுகளுக்கும் இடமளிக்கின்றது. இத்தகைய முக்கியத்துவம் மிக்க வனவளம்பற்றி உலக வனவளங்கள், வனவளத்துடன் தொடர்புபட்ட ஒப்பந்தங்களும் மகாநாடுகளும், இலங்கை வனவளம், உயிர்ப் பல்வகைமைக் காப்பகமாக வனவளம், வனவள முகாமைத்துவம், இயற்கைச் சுற்றாடல், வனவள உற்பத்திகள், எமது பிரதேச வனவள பொருளாதார விருத்தி, சாரணர் வனக் குறியீடுகள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களினூடாக இந்நூல் பேசுகின்றது. சுழிபுரம் விக்ரோரியா கல்லூ ரியின் முன்னாள் ஆசிரியரும் அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய நூல் இது.

ஏனைய பதிவுகள்