12283 – காப்புறுதி: பூட்கையும் செயற்பாடும்.

லாம்ஸன் வீரசேகர (சிங்கள மூலம்), த.கனகரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 2: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபன வெளியீடு, பானலுவ, பாதுக்கை, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 2: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ, பாதுக்கை).

xi, 171 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21X14 சமீ., ISBN: 955-610-112-8.

இன்றைய பொருளாதார உலகம், காப்புறுதி அறிமுகம், காப்புறுதி வகைகள், காப்புறுதிப் பூட்கை, காப்புறுதி முன்மொழிவுப்(பிரேரணை) பத்திரமும் உறுதியும், கடற் காப்புறுதி, ஆயுட் காப்புறுதி, தீக் காப்புறுதி, எதிர்பாராத விபத்துப் பொறுப்பு பல்வேறு பாதுகாப்பு வகைகள், மீள் காப்புறுதி, இலங்கைக் காப்புறுதி வணிகச் சந்தையின் வரலாறு, சொற்களஞ்சியம் ஆகிய தலைப்புகளில் காப்புறுதித் திட்டம் பற்றிய இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 105ஆவது அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபன வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14738).

ஏனைய பதிவுகள்

13426 சிங்களம் பேசுவதற்கான கைந்நூல்(தெமள கதாகிரீமே அத்பொத்த).

எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: பிரிஷன்மி கிரியேஷன்ஸ், 33B, (N.H.S.), சிரி தம்ம மாவத்த, 2வது பதிப்பு, 1996, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 72 பக்கம், விலை: ரூபா 35.,