12284 – இளைஞர் சாரணீயம்.

கில்வெல்-பேடன் பவெல் பிரபு (ஆங்கில மூலம்), தெல்லியூர் செ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு 2017, 1வது பதிப்பு, கார்த்திகை 1952. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 360 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-539-0.

சாரணர் இயக்கம் பேடன் பவல் பிரபு (Lord Baden-Powell: 1857-1941) என்ற ஆங்கிலேயரால் 1908ஆம்ஆண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர் ஒரு இராணுவ வீரராக இருந்து ஓய்வுபெற்றவர். 1876இல் இராணுவத்தில் சேர்ந்த இவர் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்காஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவரது பணிகளின் பயனாக பதவியுயர்வுகளைப் பெற்று 1908இல் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். தனது தங்கையானஅக்னிஸ் பேடன் பவல் (Agnes Baden-Powell:1858-1945) அவர்களின் ஒத்துழைப்புடன் பெண் சாரணர் (Girld Guide) இயக்கத்தையும் 1910இல் தோற்றுவித்தார். இந்தப் பின்புலத்தில் இளைஞர் சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908இல் எழுதினார். சாரணர் இயக்கத்தின் வேதநூலாகக் கருதப்பட்ட இந்நூல் இலங்கையில் சாரணர்களிடையே பிரபல்யமாகவிருந்தது. அதன் முக்கியத்துவம் கருதி தமிழறிஞர் தெல்லியூர் நடராசா அவர்களால் இது 1952இல் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. அதன் மீள்பதிப்பாக 65 ஆண்டுகளின் பின்னர் இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Sugarhouse Online casino Pa Review

Content Notre Avis Sur le Local casino Internet Sugar Gambling establishment: 7 Oceans casinos Sugarcasino Sugarhouse Online slots How to Play Sugar Rush Mobile Slot You’ll