12285 – அமைதியான சமாதானத் தூதுவர்: ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்.

எஸ்.சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்), பீ.எஸ்.சர்மா (தமிழாக்கம்). பத்தரமுல்ல: ஸ்ரீலங்கா யுனெஸ்கோ தேசிய சபை, இசுருபாய, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்.

21 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×24.5 சமீ.

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பிரட்ரிக்கொ மேயர் தனது ‘நாளைய சமாதானம்’ (லாபையிக்ஸ்) என்ற நூலில் உலகளாவியரீதியில் தற்கால வரலாற்றுப் பாடநூல்களில் போர்களுக்கும் போர் வெற்றிகளுக்கும் சக்கரவர்த்திகளுக்கும் தளபதிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமாதானமாகப் பெறப்பட்ட வெற்றிகளுக்கும், அதற்காக உழைத்த கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கும் வழங்கத் தவறியுள்ளோம் என்று சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். போரற்றதொரு சமாதானபூமியாக உலகை மாற்றவேண்டுமானால் இந்த முக்கியத்துவம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் அவர் பாடசாலை ஆசிரியர்கள், கல்விமான்களிடம் அந்த விழிப்புணர்வு சென்றடையவேண்டும் என்ற நோக்கில் இந்நூலை அறிமுகப்படுத்துகின்றார். அறிமுகம், உரையாடலின் பாடங்கள் (ஒல்வின் புரொஸ்ட், வட அயர்லாந்து), அன்பின் பாடங்கள் (எம்.திரேசா ராணி, ஸ்ரீலங்கா), குடியுரிமையின் பாடங்கள் (பஸ்கல் டையார்ட், பிரான்ஸ்), சாத்வீக எதிர்ப்பின் பாடங்கள் (சொஹ்ராடீ, அல்ஜீரியா), ஒருமைப்பாட்டின் பாடங்கள் (தெரேசா கங்கேமி, இத்தாலி), ஒத்துப்போதலின் பாடங்கள் (மாரி லேடிடியா காயிரோவா, புருண்டி), புரிந்து கொள்வதின் பாடங்கள் (அசிஜடா பொரோவக், பொஸ்னியா, ஹேர்சேகோவினா), பொறுப்பின் பாடங்கள் (அவி பிளக், ஐக்கிய அமெரிக்கா) ஆகிய பன்னாட்டு அனுபவ ஆக்கங்கள் சமாதானத்தை வலியுறுத்துவதாக இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31186).

ஏனைய பதிவுகள்