12286 – அன்பான வேண்டுகோள்(கல்வி, உளவியல், தத்துவம்).

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 2வது பதிப்பு, மார்ச் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

142 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

கே.வி.குணசேகரம் அவர்களது மணிவிழா வெளியீடாக வெளிவரும் இந்நூலில் கல்வியைப் பற்றியும், உளவியலைப் பற்றியும், கற்றலை விருத்திசெய்வது எப்படி என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சுமார் ஐம்பதாண்டு கல்விச்சேவையில் ஆசிரியராகச் சேர்ந்தவர். தனது அறுபதாவது வயதில் நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது ஐம்பதாண்டு கல்வித்துறை அனுபவங்களின் வழியாகத் தான் கற்றறிந்தவற்றை மாணவர் சமூகத்திற்கும் அவர்களின் பெற்றோருக்கும் தெரிவிக்கும் ஒரு முயற்சியாக சுயசரிதைப் பாணியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46675).

ஏனைய பதிவுகள்

14352 கற்க கசடற: அமரர் ஆறுமுகம் தில்லைநாதன் நினைவுமலர்.

தில்லைநாதன் கோபிநாத். கொழும்பு 13: தில்லைநாதன் கோபிநாத், 90/3, புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. அமரர்