12288 – இலங்கையில் 8ஆம் 10ஆந்தர மாணவரின் அடைவு பற்றிய தேசிய கணிப்பீடு: தேசிய அறிக்கை.

லால் பெரேரா, சுவர்ணா விஜயதுங்க, ஏ.ஏ.நவரட்ண, எம்.கருணாநிதி. கொழும்பு 3: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையம், NEREC, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxv, 209 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ., ISBN: 978-955-1187-16-3.

உலக வங்கியின் நிதியுதவியுடன் கல்வி அமைச்சுக்காக கொழும்புப் பல்கலைக்கழக கல்விப்பீடம் இவ்வாய்வினை மேற்கொண்டிருந்தது. ஆய்வின் பின்னணியும் முறையியலும் என்ற முதலாவது பகுதியில் பின்னணி, முறையியல் ஆகியவையும், கற்றல் அடைவுகளின் கோலங்களும் செல்நெறிகளும் என்ற இரண்டாம் பகுதியில் தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களில் மாணவர்களின் பெறுபேறுகள் தனித்தனி இயல்களிலும் அறிக்கையிடப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியான கற்றல் அடைவுகளில் செல்வாக்குச் செலுத்தும் பின்னணிக் காரணிகளாக பாடசாலைப் பின்னணியும் கற்றல் அடைவும், வீட்டுப் பின்னணியும் கற்றல் அடைவும், மாணவர் பின்னணியும் கற்றல் அடைவும், வலயக்கல்வி அலுவலகப் பின்னணியும் கற்றல் அடைவும், கற்றல் அடைவில் செல்வாக்குச் செலுத்தும் சில ஏனைய மாறிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் விரிவாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியில் முடிவுகளும் விதந்துரைகளும் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் சொற்களஞ்சியம், உசாத்துணை நூல்கள், மாதிரியில் இடம்பெற்ற பாடசாலைகள், ஹெனிவால்ட், கிரேய்க் ஆகியோரின் எண்ணக்கருச் சட்டகம், புள்ளிவிபர அட்டவணைகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. புள்ளிவிபர அட்டவணைகளில் மூன்று பாடங்களில் மதிப்பெண் பரம்பல்-மாகாண அடிப்படை, மூன்று பாடங் களில் நாடளாவிய சராசரிப் பெறுமானத்தின் வேறுபாடுகள், கற்றல் அடைவுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய வரைபடம், 8, 10ஆம் தரங்களுக்குரிய கலைத்திட்டச் சாதனங்களுக்குரிய ஆசிரியரின் பதிற்குறிகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57261).

ஏனைய பதிவுகள்

14562 அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்: கவிதைகள்.

துவாரகன் (இயற்பெயர்: சு.குணேஸ்வரன்). யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, பங்குனி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

12984 – இராவண தேசம்: திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள்.

திருமலை நவம் (இயற்பெயர்: திரு.சி.நவரத்தினம்). திருக்கோணமலை: வி.மைக்கல் கொலின், தாகம் பதிப்பகம், அனுசரணை, கனடா: உள்ளம் அமைப்பினர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி). xvi, 160 பக்கம்,