12290 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர் (பகுதி 1).

நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி).

lxxxvi 405 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 525., அளவு: 25.5×20 சமீ

இலங்கையின் கல்வி அமைச்சராக I.M.R.A.ஈரியகொல்ல பணியாற்றிய காலகட்டத்தில் இலங்கையின் கல்வி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவ்வேளையில் மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்ட நூற்றாண்டு மலரின் முதற் பகுதியே இந்நூலாகும். இந்நூலில் பண்டைக்காலம் (அத்தியாயம் 1-14), இடைக்காலம் (அத்தியாயம் 15-25), போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியிற் கல்வி (அத்தியாயம் 26-30) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் 30 தனித்தனி அத்தியாயங்கள் பல்வேறு கல்வியியலாளர்களால் எழுதித் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31805).

ஏனைய பதிவுகள்