(பகுதி 2). நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி).
(12), 417-904 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 525., அளவு: 25.5×20 சமீ.
இலங்கையின் கல்வி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூலின் இரண்டாவது பகுதி இது. இப்பகுதியில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பகாலம் (அத்தியாயம் 31-35), பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி (அத்தியாயம் 36-40), இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி (அத்தியாயம் 41-49), நிகழ்காலம்- அதன் அடிப்படையும் போக்கும் (அத்தியாயம் 50-67) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் 37 தனித்தனி அத்தியாயங்கள் பல்வேறு கல்வியியலாளர்களால் எழுதித் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31806).