12294 – எண்ணக்கரு கற்றல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அம்மா வெளியீடு, இணுவில், மருதனார்மடம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம்).

(4), 46 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×12.5 சமீ.

Concept learning என்று வழங்கப்படும் எண்ணக்கரு கற்றல் தொடர்பான கல்வியியல் துறைசார் கருத்துக்களை ஆசிரியர் இந்நூலில் வழங்கியிருக்கிறார். எண்ணக்கரு கற்றல் தன்னிச்சையான ஒரு செயலன்று, அதிலே பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை உளவியலாளர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். உயிரிகளையும் பொருட்களையும், அவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப வேறுபடுத்தி இனங்காண்பதுவும், அவற்றின் பண்புகளைப் பொதுமைப் படுத்துவதுமே எண்ணக்கருக்களைக் கற்றல் எனக்கூறலாம். ஒருவனது வாழ்க்கை பூராவும் எண்ணக் கருவாக்கம் நிகழ்கின்றது. ஆசிரியர் மாணவரிடம் பொருட்கள் பற்றியும், அவற்றின் பண்புகள் பற்றியும் தவறற்ற எண்ணக்கருக்களை உருவாக்க முயலுதல் வேண்டும் என்பதை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38398).

ஏனைய பதிவுகள்

12854 – ஈழத்து முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்.

எம்.எம்.உவைஸ். பாணந்துறை: எம்.எம்.உவைஸ், ‘மர்கஸி’, ஹேனமுல்லை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை, மருதானை). 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 11.5

Cellular No-deposit Bonuses

Posts Can i Victory The real deal No Deposit Slots? Greatest Incentive Choice No deposit Sportsbooks What are Cellular Gambling enterprise Incentives? C$8 8 No-deposit

14107 அனலைதீவு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயம்: இராஜகோபுர கும்பாபிஷேகச் சிறப்பு மலர் ; 2012.

கணேசையர் சௌந்தரராஜன் சர்மா (தொகுப்பாசிரியர்). அனலைதீவு: நயினார்குளம் ஐயனார் ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்). x, 200 பக்கம், புகைப்படங்கள்,