சபா ஜெயராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
ix, 112 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 19×12 சமீ., ISBN: 978-955-685-018-5.
இலங்கையில் கல்வி அகராதி வெளியீட்டின் முன்னோடி முயற்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. சொற்களுக்குரிய பொருள் விளக்கங்களோடு கூடிய ஆக்கமாக இது இடம்பெற்றுள்ளது. மேலைத்தேய நவீன அகராதி ஆக்கங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி ஆளுமை கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும் தரப்பட்டுள்ளன. பொருள் விளக்கத்திற்கு மேலும் துணைசெய்யும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52505).