12297 – கல்வி உளவியல்(பாகம் 2): கற்றலும் கற்பித்தலும்.

ச.முத்துலிங்கம். கொழும்பு 3: பேராசிரியர் ச.முத்துலிங்கம், கல்வி உளவியல்துறை, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்).

(4), 205-423 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 22., அளவு: 21.5×14 சமீ.

ஆசிரியர் ச.முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இவ்விரண்டாம் பாகத்தின் பக்க எண்ணிக்கை முதற் பாகத்தின் தொடர்ச்சியாக இலக்கமிடப் பட்டுள்ளது. பொருளடக்கம், கவனமும் புலக்காட்சியும், ஞாபகம், கற்றல் 1: தூ ண்டி – துலங்கல் நிபந்தனைப்பாடு, கற்றல் 2: தொழிலி நிபந்தனைப்பாடு, கற்றல் 3-அகக்காட்சி, எண்ணக் கருவும் கோட்பாடும், கற்றல் இடமாற்றம், பிரச்சினை விடுவித்தல், சிந்தனை பற்றிய கருத்துக்கள், நிரலித்த கற்றல், கற்றலும் ஊக்கலும், கற்றலும் கற்பித்தலும், புள்ளிவிபரவியல், பாட அடைவின் அளவீடு ஆகிய அத்தியாயங்களை இப்பாகம் கொண்டுள்ளது. அனைத்தும் அத்தியாயம் 16 முதல் 29 வரை இலக்கமிடப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002570).

ஏனைய பதிவுகள்