12301 – கல்வி முன்னேற்றம்: செப்டெம்பர்1997- ஆகஸ்ட் 1998.

கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு. கொழும்பு: கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு, கல்வி உயர்கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம்).

x, 250 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

இலங்கையின் கல்வி உயர்கல்வி அமைச்சகத்தின் கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு சமர்ப்பித்த 1997/98ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்கான கல்வி அறிக்கை. நோக்கம் கூற்று, கல்வி உயர்கல்வி அமைச்சின் பூரண பணிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிகள், கல்வி அமைச்சின் பணி அமைப்பின் வியூகத்தை முறைப்படுத்தல் ஆகியவை முதலாவது அத்தியாயத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தம், ஆரம்ப கல்விச் சீர்திருத்தம், கனிஷ்ட இரண்டாம் நிலை கல்விச் சீர்திருத்தம், சிரேஷ்ட இரண்டாம் நிலை கல்விச் சீர்திருத்தம், புதிய உயர்தர கல்விச் சீர்திருத்தம், பல்கலைக்கழகக் கல்விச் சீர்திருத்தம் ஆகியன இரண்டாம் அத்தியாயத்திலும், பொதுக் கல்விச் செய்திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிபெறும் இரண்டாம் நிலைக் கல்வி அபிவிருத்திச் செய்திட்டம், சீடா உதவி பெறும் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்திச் செய்திட்டம், சீடா உதவிபெறும் பெருந்தோட்டப் பாடசாலைகள் கல்வி அபிவிரத்திச் செய்திட்டம், ஆசிரிய கல்வி ஆசிரிய பதவியமர்த்தல் செய்திட்டம், ஜீ.டீ.இசட் செய்திட்டம், ஆரம்பக் கணித செய்திட்டம், ஆரம்பக் கல்வித் திட்டச் செய்திட்டம், கோட்ட மட்டத்தில் கனிஷ்ட பாடசாலை அபிவிருத்திச் செய்திட்டம் ஆகியன 3ஆவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலக கோட்ட மட்டத்தில் பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் செய்திட்டம், தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சி நிரல், கணனி மத்திய நிலையங்கள் என்பன நான்காவது அத்தியாயத்திலும், இலவசப் பாடசாலைச் சீருடைத் துணி, பாடநூல்கள், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் கொடை, பாடசாலைப் பருவப் பயணச்சீட்டு, பாடசாலைகள் நூல்நிலைய அபிவிருத்தி ஆகியவற்றினை வழங்குதல் என்பன 5ஆம் அத்தியாயத்திலும் அறிக்கையிடப்பட்டுள்ளன. மேலும், தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரி, பணிமுன் ஆசிரியப் பயிற்சி-தேசிய கல்விக் கல்லூரி, பயிற்றப்படாத ஆசிரியரைப் பயிற்றுவித்தல்/ஆசிரியர் கலாசாலைகள், வெளிநாட்டு முகவர் நிறுவகமும் வெளிநாட்டுப் பணியகமும், இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை கல்வி நிர்வாகச் சேவை, புதிய ஆசிரியரைச் சேர்த்தல் ஆகியன ஆறாம் அத்தியாயத்திலும், சிங்கள மொழியும் மானிடவியலும், தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் கிளை, ஆங்கிலக் கிளை, முஸ்லிம் பாடசாலைகள் கிளை, சமய விழுமியக் கல்விப் பிரிவு, பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் கல்வி, விவசாயக் கல்வி, விஞ்ஞான கணித கல்வி, விளையாட்டுக்கள், உடற்கல்விக் கிளை, பாடசாலைகள் மேற்பார்வைக் கிளை, ஆலோசனையும் தொழில் வழிகாட்டலும் நிகழ்ச்சி நிரல்கள், பிரிவேனைக் கல்விக் கிளை, இணைப் பாடவிதான கல்விக் கிளை, முறைசாராக் கல்விக்கிளை கட்டாயக் கல்விச் சட்டங்களை நடைமுறைப் படுத்துதல் ஆகிய விடயங்கள் 7ஆவது அத்தியாயத்திலும் அறிக்கையிடப்பட்டுள்ளன. 8ஆவது அத்தியாயம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, புத்தசிராவக பிக்குகள் பல்கலைக்கழகம், இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகம், இலங்கை உயர்தொழில் நுட்பக் கல்வி நிறுவகம் ஆகியன பற்றிய அறிக்கையையும், 9ஆவதுஅத்தியாயம், தேசியகல்வி நிறுவகம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை, இலங்கை தேசிய நூலகச் சேவைச் சபை, கல்விச் சேவை ஆணைக்குழு, இலங்கை யுனெஸ்கோஆதசிய சபை ஆகியவற்றின் பணிகள் பற்றி அறிக்கையினையும் கொண்டுள்ளது. பத்தாவது அத்தியாயத்தில் கல்விச்செலவு 1987/2000, பாடசாலைகள் வகைரீதியாக மாணவர் எண்ணிக்கை, தரப்பிரிவின் அடிப்படையில் பாடசாலைகளின் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை அடிப்படையில் அரச பாடசாலைகளின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரச பாடசாலைகளின் எண்ணிக்கை, பால், போதனா மொழி, பிரிவு அடிப்படையில் அரச பாடசாலைகளிலுள்ள மாணவர் எண்ணிக்கை, பால், போதனா மொழி கல்வித் தகுதி, அடிப்படையில்அரச பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் எண்ணிக்கை என இவ்வறிக்கை விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37932).

ஏனைய பதிவுகள்

step three Reel Slots

Content Reel ’em Inside the Slot machine Better Online game Global Harbors Local casino Ports Extra: Online casino Bonus Revolves Research Of the Simplest Video