சபா ஜெயராஜா. யாழ்ப்பாணம்: கல்வியியல் துறை, யாழ். பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: சண்ஷைன் கிராப்பிக்ஸ், கே.கே.எஸ். வீதி, இணுவில்).
(6), 134 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19.5×14 சமீ.
கல்வித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மேற்கிளம்பிய கோட்பாடுகளைத் தமிழ்மொழியில் விளக்கும் நோக்கத்துடன் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய அகல்விரிவாக்கப் பண்பு கொண்ட அமைப்பியல் வடிவத்தை இந்நூல் பெற்றுள்ளது. கல்வியியலிற் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் இலக்கியத் திறனாய்வுப் புலத்திலும் இடம்பெறும் ஒப்புமை இத்தகைய ஒரு நூலாக்கத்தை மேற்கொள்வதற்கான காரணமாகியுள்ளது. இத்துறையில் மேலும் தேடலை முன்வைக்கும் வகையில் ஆங்கில எண்ணக் கருக்களும் ஆசிரியரால் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35846).