12312 – கல்வியியல்: ஓர் அறிமுகம்.

ச.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: வி.சதாசிவம், கீதாஞ்சலி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1974. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).

(8), 322 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

கல்விக் கோட்பாடுகள் (கல்விச் சிந்தனையாளர் சிலரின் கருத்துக்கள், கல்வியும் பொருளாதாரமும், கல்வியும் சமூகமும், கலைத்திட்டமும் அதன் வகைகளும், சமயக்கல்வி), உளவியல் (ஊக்கம் பற்றிய கொள்கைகள், பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள், பிள்ளைகளின் பொருத்தப்பாடு, எண்ணக்கருவும் சிந்தனையும், அறிவு வளர்ச்சி), கற்றலும் கற்பித்தலும் (கற்றலும் ஊக்கமும், கற்பித்தற் பொது முறைகள், ஸ்கின்னரின் கொள்கையும் நிரலித்த கற்பித்தலும், வகுப்பறைக் கற்பித்தல்), அளவீடும் வழிகாட்டலும் (பாட அடைவும் அதன் அளவீடும், நுண்மதியும் அதன் அளவீடும், ஆளுமையும் அதன் அளவீடும், தொழிலுக்கு வழிகாட்டல், கூட்டு வழிகாட்டல்), கல்வி முறை (சுதந்திரத்தின் பின் இலங்கையில் கல்வி மாற்றங்கள், இலங்கையிற் புதிய கல்வித் திட்டம், இங்கிலாந்தின் கல்வி முறை) ஆகிய ஐந்து பாகங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் சதாசிவம் முத்துலிங்கம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தின் கல்வியியல்துறை விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34443. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 017268).

ஏனைய பதிவுகள்

12121 – அருணகிரிநாத சுவாமிகளருளிய கந்தரநுபூதி.

இரா.சபாநாயகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கதிர்காம யாத்திரீகர் தொண்டர் சபை, 1வது பதிப்பு, ஜுலை 1970. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 33, சென் செபஸ்தியன் மேடு). (4), 73 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14939 பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரும் உலகத் தமிழ் ஆய்வுகளும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.,

12506 – உள்ளக் கமலம்.

கோகிலா மகேந்திரன் (பிரதம ஆசிரியர்), ப.விக்னேஸ்வரன் (நிர்வாக மேற்பார்வை), தயா சோமசுந்தரம் (துறைசார் மேற்பார்வை). கொழும்பு: சிறுவர் பாதுகாப்பு நிதியம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வலிகாமம் கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு,

14552 மருதம் கலாசார விழா சிறப்பு மலர். 2005.

மலர் வெளியீட்டுக் குழு. வெல்லாவெளி: கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், போரதீவுப் பற்று, 1வது பதிப்பு, 2005. (களுவாஞ்சிக்குடி: பப்ளிக்கேஷன் அச்சகம், பட்டிருப்பு). ஒii, 63 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14991 தென்னிலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் இந்து சமயமும், தமிழும்.

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). ஒஒ, 212