சி.சரவணபவானந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 15: சி.சரவணபவானந்தன், நிருவாகச் செயலாளர், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கொழும்பு பணிமனை, கனடா இல்லம், 40, மத்திய வீதி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு: ஈ.எஸ். பிரின்டர்ஸ்).
iv, 21410116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கொழும்புக் கிளைகளின் உதவியுடன் வாண்மை விருத்தி, வழிகாட்டல் அமர்வுகளைத் தொடராக கடந்த 2005 ஒக்டோபர் மாதத்தில் இருந்து சிலகாலம் நடாத்தி வந்தது. இவ்வாண்மை விருத்தி வழிகாட்டல் அமர்வில் பல்வேறு ஆவணங்களைத் தொகுத்து ஐந்து வகையான சிறு கையேடுகளை வழங்கியுள்ளது. அத்துடன் 2002இல் இலங்கைக் கல்வி நிருவாக சேவை பரீட்சை நடைபெற்றபோது வெளியிடப்பட்ட கல்வி முகாமைத்துவ சுற்றறிக்கைகளின் தொகுப்பு இற்றைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேவைப்பாடு, ஆசிரியர் செயலாற்றுகை தரங் கணிப்பீடு, ஆசிரியர் சேவை/பதவியுயர்வு, ஆசிரியர் பிரசவலீவு, ஆசிரியர் ஓய்வூதியம், பாடசாலை முகாமைத்துவம், பாடசாலை மட்டக் கணிப்பீடு, பொது நிர்வாகம், தாபன விடயம், தகவல் தொழில்நுட்பம், பொது ஆகிய தலைப்புகளில் இவை தொகுக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42378).