12314 – கல்வியியல் நோக்கு.

யூ.எல்.அலியார். கொழும்பு 14: பைத்துல் ஹிக்மா, 143/15, கிரான்ட்பாஸ் வீதி, 1வதுபதிப்பு, மே 1995. (கொழும்பு 12: டொப் பிரின்ட்ஸ், 35ஏ, முதலாவது பள்ளித் தெரு).

xvii, 147 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17×12 சமீ., ISBN: 955-95831-0-7.

இந்நூலில் ஆசிரியரின் கல்வியியல் சார்ந்த பன்னிரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கல்வியியல் நோக்கு, முன்பள்ளிக் கல்வி-நோக்கும் போக்கும், ஆரம்பக் கல்வி ஆசிரியர்-உயர் பண்புகள், நேர முகாமைத்துவம், இஸ்லாமிய தத்துவ நோக்கில் ஆசிரிய நெறி, பகற் கனவு ஓர் உளவியல் சீராக்கம், பாடசாலைகளில் கட்டொழுங்கு பேணல், கல்வி வழிகாட்டலும் ஆலோசனை சேவையும், பாடசாலை நூலகங்கள், பாடசாலைக் கொத்தணி முறை, கல்வி முறையில் கலாசார தனித்துவம், கல்வியில் சமவாய்ப்பு-கோட்பாடும் செயற்பாடும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப் பட்டுள்ளன. கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், சம்மாந்துறையைச் சேர்ந்த உதுமா லெவ்வை தம்பதியினரின் புதல்வரான அலியார் சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். கல்வித்துறை டிப்ளோமா, ஊடகத்துறை டிப்ளோமா, கல்வியியல் முதுமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் மக்குவாரி பல்கலைகழகத்தில் Dip. in. EMIS பட்டத்தினையும் பெற்றுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ள அலியாரின் முதலாவது ஆக்கம் 1965 அக்டோபர் 10 ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘ஈழநாடும் கண்ணகி வழிபாடும்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. ஆக்க இலக்கியங்களை இவர் படைக்காவிடினும் கூட அறிவுசார் கட்டுரைகள் முன்னூ ற்றுக்கும் மேல் எழுதியுள்ளார்.கொழும்புப் பல்கலைக்கழத்தில் 1997 இல் பத்திரிகையியல் டிப்ளோமா நெறியைப் பூர்த்தி செய்து விசேட சித்தி பெற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் டிப்ளோமா நெறிக்கு 2002- 2003ஆம் ஆண்டுகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14739).

ஏனைய பதிவுகள்

14154 நல்லைக்குமரன் மலர் 2017.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xiv, 264 + (40) பக்கம், புகைப்படங்கள்,

14487 விஞ்ஞான தொழில்நுட்பவியல் G.C.E.A/L: நீரியல்வளங்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். கொழும்பு 6: இனிய தென்றல் பதிப்பகம், 135, கனல்பாங்க் ரோட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). xii,