12318 – கற்றலில் மாணவர் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்(ஓர் உளவியல் நோக்கு).

எம்.எம்.பஹீம். கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, (4), 64 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21X14 சமீ.

இந்நூல், எண்ணங்களைத் தட்டிக் கொடுங்கள், பிரச்சினைகளின் பிறப்பிடம், மன அமைதிக்கு வழி, நேர முகாமைத்துவம், ஞாபக மறதியா? கவலையே வேண்டாம், துரித கற்றல் முறைகள், மனதை ஒருமுகப்படுத்தல், கற்றலைப் பாதிக்கும் நடத்தைகள், பெற்றோர் பங்களிப்பு ஆகிய ஒன்பது இயல்களில் மாணவர்களிடையே உருவாகும் கல்விசார் பிரச்சினைகளுக்கு வழிதேடுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50211).

ஏனைய பதிவுகள்