12319 – சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்வியும்: ஆசிரியர் ஆலோசகர்களுக்கான கைந்நூல்.

K.T.கனகரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்விக்கான செயற்றிட்ட வெளியீடு, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை).

80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சனத்தொகைப் பரம்பலியல் (அடிப்படை எண்ணக்கரு, சனத்தொகை வேறுபாடு, சனத்தொகையும் வாழ்க்கை நலன்களும், குடும்ப அலகு, பொறுப்புள்ள பெற்றோர்கள், கட்டிளமைப் பருவம்), பாடவிடய ஒன்றிணைப்பு (பாடவிடயங்கள் சமூகக் கல்வி, விஞ்ஞானம், சுகாதாரம்), இனப் பெருக்க சுகாதாரம் கற்பிக்க உபயோகிக்கக்கூடிய உருக்கள், சனத்தொகை குடும்ப வாழ்க்கை கல்விச் செயலமர்வுகளில் பாடசாலை நடைமுறைப்படுத்தக்கூடிய செயற்பாடுகள், மதிப்பீடு (வரலாறும் சமூகக் கல்வியும், விஞ்ஞானம்), பிரதேச ரீதியான செயலமர்வுகளில் கவனிக்கப்படவேண்டியவை, பாடத்திட்டம் ஆகிய ஏழு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39140).

ஏனைய பதிவுகள்

12672 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2002.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 12: ஜே.அன். எஸ் சேர்விசஸ் அச்சகம், இல.

14284 காடு சார்ந்த மேட்டுநிலக் கமத்தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ள உலர்வலய சமுதாயமொன்றில் சிறுவர்உரிமைகளின் தன்மை.

ஆ.ர்.ஆ.சுனில் சாந்த (ஆராய்ச்சியும் கட்டுரையும்), நா.சுப்பிரமணியன் (மொழிபெயர்ப்பு மேற்பார்வை). கொழும்பு 7: ஆசியாவில் அபிவிருத்திக்கான ஆய்வு மற்றும் கல்விப் பணிகள் தொடர்பான முன்னோடி அமைப்பு (இனேசியா), 64, ஹோற்றன் பிளேஸ், 1வது பதிப்பு, 1999.

12630 – குணமாக்கும் மூலிகைகளின் மகத்துவம்.

ஹெமினியா டீ குஸ்மேன் லெடியன் (சிங்கள மூலம்), கே.துரைராஜா (தமிழாக்கம்). நுகேகொடை: இலக்பஹான பிரசுராலயம், இல. 8, தேவாலய வீதி, பாகொட, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நுகேகொடை: இலக்பஹான பிரசுராலயம்). 151

14594 கட்டிடக் காடும் யுரேனியக் கதிரும்.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). ஒiஎ, 82 பக்கம், விலை: ரூபா

12646 – தந்திரோபாய மனிதவள முகாமைத்துவம்(உயர்கல்விக்குரியது).

தனேஸ்வரி ரவீந்திரன். யாழ்ப்பாணம்: உயர்கல்வி நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 156 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21×15 சமீ. நிறுவனங்கள் சிறந்த வினைத்திறனை அடைவதற்கு

12864 – பொச்சங்கள்.

வ.அ.இராசரெத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (திருக்கோணமலை: அச்சகத் திணைக்களம், வடக்குகிழக்கு மாகாண அரசு). (16), 17-175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: