12319 – சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்வியும்: ஆசிரியர் ஆலோசகர்களுக்கான கைந்நூல்.

K.T.கனகரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்விக்கான செயற்றிட்ட வெளியீடு, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை).

80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சனத்தொகைப் பரம்பலியல் (அடிப்படை எண்ணக்கரு, சனத்தொகை வேறுபாடு, சனத்தொகையும் வாழ்க்கை நலன்களும், குடும்ப அலகு, பொறுப்புள்ள பெற்றோர்கள், கட்டிளமைப் பருவம்), பாடவிடய ஒன்றிணைப்பு (பாடவிடயங்கள் சமூகக் கல்வி, விஞ்ஞானம், சுகாதாரம்), இனப் பெருக்க சுகாதாரம் கற்பிக்க உபயோகிக்கக்கூடிய உருக்கள், சனத்தொகை குடும்ப வாழ்க்கை கல்விச் செயலமர்வுகளில் பாடசாலை நடைமுறைப்படுத்தக்கூடிய செயற்பாடுகள், மதிப்பீடு (வரலாறும் சமூகக் கல்வியும், விஞ்ஞானம்), பிரதேச ரீதியான செயலமர்வுகளில் கவனிக்கப்படவேண்டியவை, பாடத்திட்டம் ஆகிய ஏழு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39140).

ஏனைய பதிவுகள்

12365 – இளங்கதிர்: 36ஆவது ஆண்டு மலர் 2004/2005.

ஜெ.ஆன்.யாழினி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2005. (முறுதகஹமுல்ல 20526: வர்தா பதிப்பகம், 85 சீ, பிட்டுனுகம). viii, 146 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: :