கல்வி உயர்கல்வி அமைச்சு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி, உயர் கல்வி அமைச்சு, இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
(2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.
கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாடசாலைகளில் தமிழ் மொழித் தினங்களை ஒழுங்குசெய்யும் நடைமுறைகள் பற்றிய 1997ஆம் ஆண்டின்26ஆம் இலக்க சுற்று நிருபணம் இதுவாகும். தமிழ்மொழித்தினப் போட்டிகளை பாடசாலை மட்டத்திலும், வலய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் இறுதியாக தேசிய மட்டத்திலும் எவ்வாறு நடத்துவது என்றும் அதற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் என்னவென்று விளக்குவதுடன், போட்டியாளர்களை மதிப்பீடு செய்யும் நடைமுறைகள் என்ன என்பதையும் விபரமாக இந்தச் சுற்றுநிருபணம் தெளிவுபடுத்துகின்றது. நூலுருவில் வெளியிடப்பெற்றுள்ள இவ்வாவணம் உயர் கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவினால் சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் இதர கல்விசார் நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35525).