12324 – தொழிலாளர் கல்விக் கையேடு.

ஓ.ஆறுமுகம், பி.சுதந்திரராஜா, ஆர்.ஸ்ரீகாந்தன், சந்திரா குமாரசுவாமி. கல்கிஸ்சை: இலங்கை தொழிலாளர் கல்வியாளர்களின் சங்கம், இல.7, சேர்கியூலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட மெக்லீன் அச்சகம்).

(8), 179 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16 சமீ.

இலங்கையில் தொழிலாளர் கல்வி மேம்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட இப்புத்தகம், சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள ‘Workers Education and its Techniques’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கையேடு அந்த நூலை மூலமாகக் கொண்டு தேசிய ரீதியாக தொழிலாளர் கல்வித் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய வகையிலான தேவையான அம்சங்களை எடுத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நோக்கம், தொழிலாளர் கல்வியின் விரிவெல்லை, உள்ளடக்கம், பயிற்றுவிப்போர், அமைப்பாளர்கள், வெளியார் உதவி, மாணவர்கள், காலமும் இடமும், வளர்ந்தோரும் கற்றல் செயல்முறையும், நுட்பங்கள், கருவிகளும் பொருட்களும் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39062. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014797).

ஏனைய பதிவுகள்

14033 திருக்குறள்.

திருவள்ளுவர் (மூலம்), மு.வரதராசனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம்,

14799 மறுபடியும் நாங்கள்.

இந்துமகேஷ் (இயற்பெயர்: சின்னையா மகேஸ்வரன்). ஜேர்மனி: சி.மகேஸ்வரன், Volta Str. 51, 2800 Bremen-33, West Germany, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (கல்லச்சுப் பிரதியாக்கம்). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15

14331 தொழில் சட்டங்கள்: இலகுவான முறையில்.

சாறுக்க சமரசேகர. கொழும்பு 3: நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டம், 4ஆவது மாடி, இல. 310, காலி வீதி, 1வது பதிப்பு, 2008. (மஹரகம: தரஞ்ஜி பிரிண்ட்ஸ், இல. 506, ஹைலெவல் வீதி,

14846 தமிழியல் ஆய்வுச் சோலை: தமிழ் இலக்கியச் சிந்தனை ஆய்வுகள்.

கனகசபாபதி நாகேஸ்வரன். கொழும்பு: தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, மே 2006. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xxvii, 203 பக்கம்,