12327 – பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்: ஒரு விளக்கநிலை நோக்கு.

சோ.சந்திரசேகரம், மா.கருணாநிதி. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, ஈ.ஏ.குரெ மாவத்தை).

96 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு: 21×15 சமீ.

அறிமுகம், இந்நூலின் நோக்கங்கள், இலங்கையில் ஆங்கிலக் கல்வி: ஒரு வரலாற்று நோக்கு, மீண்டும் பயிற்றுமொழியாக ஆங்கிலம், முடிவுரை ஆகிய பிரதான ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகள் என்ற பெயரில் போதனாமொழி மாற்றத்தின் பின்னணி, பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி வெற்றிபெற்றுள்ளதா?, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்றுமொழிப் பிரச்சினை, முடிவுரை என இந்நூல் மேலதிக தகவல்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47701).

ஏனைய பதிவுகள்

17658 கருங்குயில்.

ஷோபாசக்தி (இயற்பெயர்: அன்ரனிதாசன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 164 பக்கம்,

11120 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி ஐந்து: ச,சா.

சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), சீ. தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், 98 வாட்