12327 – பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்: ஒரு விளக்கநிலை நோக்கு.

சோ.சந்திரசேகரம், மா.கருணாநிதி. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, ஈ.ஏ.குரெ மாவத்தை).

96 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு: 21×15 சமீ.

அறிமுகம், இந்நூலின் நோக்கங்கள், இலங்கையில் ஆங்கிலக் கல்வி: ஒரு வரலாற்று நோக்கு, மீண்டும் பயிற்றுமொழியாக ஆங்கிலம், முடிவுரை ஆகிய பிரதான ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகள் என்ற பெயரில் போதனாமொழி மாற்றத்தின் பின்னணி, பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி வெற்றிபெற்றுள்ளதா?, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்றுமொழிப் பிரச்சினை, முடிவுரை என இந்நூல் மேலதிக தகவல்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47701).

ஏனைய பதிவுகள்

14500 திருமுறைப் பண்ணிசை.

தெ.ஈஸ்வரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவில், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜனவரி 1995. (சென்னை 600002: மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தளகம், 68 (834) அண்ணாசாலை). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12657 – நிதிக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம்: கணக்கீட்டு முதன்மைகள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் .

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜுலை 1999, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).