12331 – புதிதாக சிந்திப்போம்: சமுதாயத்திற்கான கல்வி.

மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பேராசிரியர் மா.சின்னத்தம்பி, கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி).

viii, 206 பக்கம், விலை: ரூபா 420., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-41194-0-6.

2013ஆம் வருடம் வலம்புரி நாளிதழில் முப்பது வாரங்களாகத் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்காக என்ன செய்கிறீர்கள் என்ற கட்டுரையில் தொடங்கி, உங்களை முன்னேற்றுவதற்கு உண்மையில் நீங்கள் ஆசைப்படுகின்றீர்களா? அது எவ்வாறு சாத்தியப்படும்? என்பது ஈறாக முப்பது கட்டுரைகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அனைத்தும் இலங்கையின் கல்விச் செயற்பாட்டினையும் சமூகவியல் சார்ந்த கருத்தக்களையும் எளிமையாக பொது வாசகர்களுடன் உரையாடி அவர்களிடம் எடுத்துச் செல்வதாக அமைகின்றன. பெற்றோரியம், பொதுப் பரீட்சைகள், மொழிக்கல்வி, மாணவர்களிடையே பேச்சாற்றல் வளர்க்கப்படுதல், பட்டதாரி களிடையே வேலையில்லாத் திண்டாட்டம், முன்பள்ளிகளில் தேவைப்படும் விழிப்புணர்வு, கல்வித்துறைக்கு புலம்பெயர்ந்த பழைய மாணவர்களின் பங்களிப்பு, நேரம் தவறாமை எனப் பல விடயங்களை இவரது கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55286).

ஏனைய பதிவுகள்