12332 – பெற்றோர் அறிய வேண்டியவையும் மாணவர் பிரச்சனைகளும்.

சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி. கனடா: சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி, டொரன்ரோ, 1வது பதிப்பு, 2008. (கனடா: Fine Copy Printing, Toronto).

ii (12), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்க வேண்டியதன் அவசியம், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம் மாணவர்களுக்குப் பெற்றோர் சமயக் கல்வி புகட்ட ஆவன செய்தல் வேண்டும், ஒன்ராரியோ மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி அறிக்கை பற்றிய சில தகவல்கள், ரொரன்ரோப் பாடசாலைகளில் கற்கும் சிறார்களின் காலை உணவும் பெற்றோர்களின் கவனமும், கனடியப் பாடசாலை மாணவர்களும் தேகாரோக்கியத்திற்கான செயற்பாடுகளும், மாணவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதில் பெற்றோரின் பங்கு, கற்றலில் பின்தங்கிய மாணவர்களும் அவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளும், E.Q.A.O.பரீட்சை பற்றிய சில தகவல்கள், போதைப் பொருட் பாவனையில் மாணவர்கள் ஈடுபடாதிருக்கப் பெற்றோரின் செயற்பாடுகள், ரொரன்ரோப் பாடசாலைகளில் மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்செயல்களைத் தடுப்பதில் பெற்றோரின் பங்கு, உயர்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பெற்றோர் ஆசிரியர், மாணவர் ஆகிய முத்தரப்பினரதும் இணைந்த செயற்பாட்டின் விளைவே கற்றலின் பெறுபேறாகும், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்மொழி வாரமும் பெற்றோர்களும், உயர் பாடசாலை மாணவர்களும் சமூகக் கல்லூரிகளும், உயர்கல்வி கற்கும் மாணவர்களும் பல்கலைக்கழகமும், புலம்பெயர்ந்த நாட்டில் சூதாட்டத்தினால் பாதிக்கப்படும் சில பெற்றோர்கள், புவி மாசடைவதைத் தடுப்பதில் பெற்றோரின் பங்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மாணவர்களும் கவின்கலைகளும், பெற்றோர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எவ்வழிகளில் உதவி புரியலாம் ஆகிய 19 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் நூலாசிரியர் முன்னைநாள் பிரதிக் கல்விப் பணிப்பாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47310).

ஏனைய பதிவுகள்