12333 – மனித விழுமியத்துக்கான சத்திய சாயி கல்வி.

லொறேன் பறோஸ் (ஆங்கில மூலம்), சபா.ஜெயராசா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம், பிள்ளையார் கோவிலடி, தாவடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 13: ஸ்பார்ட்டன் பிரின்ட்ஸ், 154, Wolfendhal Street).

(8), 136 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ.

பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவுடைய அருள் உரைகளில் இருந்து தேர்ந்த வரிகள் இவை. ஆங்கில மொழியில் முன்னர் Loraine Burrows அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம். ஆங்கில மூல நூலை தாய்லாந்திலுள்ள சத்திய சாயி நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கல்வியின் நோக்கம், ஆசிரியரின் பங்கு, மாணவரின் கடமை, இலட்சிய மாதர் இயல்பு, சிறுவர்களுக்கு அறிவுரை, பெற்றோரின் வழிகாட்டல், சாயி ஆன்மீகக் கல்வி, மேற்கோள்கள் ஆகிய 8 பகுதிகளில் இந் நூல் கல்வியியல் சார்ந்த ஆன்மீகத் தத்துவங்களையும் அறிவுரைகளையும் கொண்டதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34593).

ஏனைய பதிவுகள்

14145 நல்லை குமரன் மலர் 1998.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (12), 108 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14890 இலங்கை தேசப்படத் தொகுதி: இரண்டாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 161 பக்கம்,

12698 – அழகியற் கல்வி: பரத நாட்டியம்.

யசோதரா விவேகானந்தன். சாவகச்சேரி: கமலாவதி பிரசுரம், சரசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்). viii, 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.

12355 – இளங்கதிர்: 26ஆவது ஆண்டு மலர் 1991/1992.

த.தவவதனி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (கண்டி: சென்ட்ரல் பிரின்டர்ஸ், 98, டி.எஸ்.சேனநாயக்க வீதி). XVI, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*18.5 சமீ. இவ்விதழில் இலங்கைப்

14653 மூசாப்பும் ஒரு முழு வெயிலும்.

எஸ்.ஜனூஸ். (இயற்பெயர்: ஜனூஸ் சம்சுதீன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கொழும்பு 10: யூ.டீ.எச். பிரின்டர்ஸ், 277/6, முதலாவது டிவிசன், கிங்ஸ் கோர்ட், மருதானை, ). ix,