12335 – முரண்பாடு தீர்வுக்கான கல்வி: பயிற்றுநர் கைந்நூல்.

S.M.R.சூதீன் (தமிழாக்கமும், பதிப்பாசிரியரும்). மகரகம: ஆரம்பக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 2வது பதிப்பு, 1996, 1வது பதிப்பு 1995. (மகரகம: அச்சிடற் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம்).

(8), 51 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×21.5 சமீ.

தேசியக்கல்வி நிறுவக ஆரம்பக் கல்வித் துறையினர் ‘முரண்பாடு தீர்வுக்கான கல்வி’ தொடர்பான முன்னோடிச் செயற்திட்டமொன்றை இரு வருடகாலமாக நடைமுறைப்படுத்திப் பெற்ற அனுபவங்கள் இப்பயிற்சிக் கைந்நூலின் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரிய ஆலோசகர்கள் மூலமாக ஆசிரியர்களை வளம் படுத்துவதற்குப் பதிலாக ஆசிரியர் குழுவில் பயிற்சிபெற்ற ஒருவர் தமது சக ஆசிரியர்களை வளம்பெறச்செய்தல் என்னும் கோட்பாட்டினைச் செயல்முறைப்படுத்தும் திட்டத்துக்கான பயிற்றுநர் கைந்நூல் இதுவாகும். மனதை ஒருநிலைப் படுத்தல், தனியாள் இடைத் தொடர்பு ஐ, தனியாள் இடைத் தொடர்பு ஐஐ, அவதானமாகச் செவிமடுத்தல், உறுதியான வெளிப்பாடு ஐ, உறுதியான வெளிப்பாடு ஐஐ, முரண்பாட்டைப் பகுப்பாய்வு செய்தல், முரண்பாடு தீர்த்தல், நடுநிலைமை, ஏனையோரை மதித்தலும் கூட்டு வலிமையும், மதிப்பீடு-சிந்தனைக் கிளர்வு, அநுபந்தம் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50468).

ஏனைய பதிவுகள்

12436 – வித்தியோதயம்: 1976-77-78.

ச.அருட்சோதி, நா.வரதராசா (இணை இதழாசிரியர்கள்). நுகேகொடை: தமிழ் மன்றம், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxiv, 236 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

12480 – தமிழ்மொழித் தினம் 1994.

தமிழ்த்தின விழாக் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கொழும்பு வடக்கு கல்விக் கோட்டம், கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு 13: ரிபாய் அச்சகம், 143/9, ஜிந்துப்பிட்டி வீதி). (66)