12336 – முன்பள்ளி ஆசிரியர் பயிற்றுநர் கைநூல்.

வெளியீட்டுக் குழு. திருக்கோணமலை: ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2002. (திருக்கோணமலை: பதிப்பத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாண அரசு).

vi, 340 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

இப்பயிற்றுநர் கைநூலில் ஒவ்வொரு தலைப்புக்குமான அறிமுகத்துடன் பயிலுநர் அடையவேண்டிய குறிக்கோள்களும் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குறிக்கோளை பயிலுநர் அடைவதற்கு வழிப்படுத்தும் செயற்பாடுகள், பொருத்தமான பின்னணித் தகவல்களுடன் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. குழந்தை உளவியல், பிள்ளை வளர்ச்சியும் அபிவிருத்தியும், பிள்ளையின் இயல்பும் கற்கும் முறையும், ஆக்கத்திறன் விருத்தி-சித்திரம், ஆக்கத் தொழிற்பாடு-சங்கீதம், மொழி விருத்தி, கணித விருத்தி, சூழலைப் புரிந்துகொள்ளல், உடல் விருத்திச் செயற்பாடு கள், கற்றல் நிலையங்கள், முன்பள்ளியின் முகாமைத்துவமும் நிர்வாகமும், ஒருங்கிணைந்த அணுகுமுறை, முன்பள்ளி ஆசிரியர் பெற்றோர் தொடர்பு, சிறுவர் உரிமைகள், சுகாதாரமும் போசாக்கும் முதலுதவியும் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43616).

ஏனைய பதிவுகள்

14159 புங்குடுதீவு கிராஞ்சியம்பதி ஸ்ரீ மீனாக்ஷியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர ஸ்வாமி கோவில் (சிவன் கோவில்) 33 குண்ட, 100 ஸ்தம்ப உத்தமோத்தமபக்ஷயாக மஹா கும்பாபிஷேக மலர்.

க.சிவானந்தன், இ.கெங்காதரக் குருக்கள் (மலராசிரியர்கள்). புங்குடுதீவு 03: சிவஸ்ரீ ஸ்ரீநிவாச நாகேந்திரக் குருக்கள், மண்டல பூர்த்தி வெளியீடு, சிவன் கோயில், 1வது பதிப்பு, மே 1977. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). (150) பக்கம், புகைப்படங்கள்,

12901 – என் குருநாதன்.

அடியார்க்கடியன் (இயற்பெயர்: தவத்திரு சிவகுருநாதன் அடிகளார்). கொழும்பு 2: தத்துவஞானத் தவச்சாலைப் பிரசுரம், 31ஃ21, டோசன் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xii,

12642 – கோ பெருஞ்செல்வம்.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம்,சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2017.(யாழ்ப்பாணம்: ஆரணன் பதிப்பகம், மருதனார்மடம்). x, 86 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN:

12903 – சீரடி சாயிபாபா மகிமை.

திருச்செல்வம் தவரத்தினம். கொழும்பு 12: பீனிக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், ழே.ஊ.பு.6, செபஸ்தியன் தொடர்மாடிக் குடியிருப்பு, புனித செபஸ்தியார் வீதி, குணசிங்கபுர, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு