12338 – ஸ்ரீ அரவிந்தரின் கல்விச் சிந்தனைகளும் கல்விப் பணிகளும்.

என்.கே.தர்மலிங்கம் (மூல நூலாசிரியர்), தர்மசுதர்சன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்த் தென்றல் வெளியீடு, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

vii, 180 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ.

ஸ்ரீ அரவிந்தர் வாழ்ந்த காலம், ஸ்ரீ அரவிந்தர் வாழ்ந்த காலமும் கருத்தும், ஸ்ரீ அரவிந்தர் கண்ட தத்துவ, சமூக ஆன்மீகக் கருத்துகள், ஸ்ரீ அரவிந்தரின் கல்விச் சிந்தனைகள், ஸ்ரீ அரவிந்தரால் அமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ அரவிந்தரது கல்விச் சிந்தனைகளும் சமகாலத்திற்கான பொருத்தப்பாடும், மதிப்பீடு ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலாநிதி சபா. ஜெயராசா அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் என்.கே.தர்மலிங்கம் அவர்கள் மேற்கொண்ட கல்வியியல் ஆய்வு இதுவாகும். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக்கொண்ட இலக்கிய வித்தகர் என்.கே.தர்மலிங்கம் ஒரு கல்வியியலாளரும் அரங்கியலாளரு மாவார். 1987இல் வெளிவந்த இவரது கீழைத்தேய கல்வியியற் சிந்தனைகள் என்ற நூல் தமிழ் சாகித்திய விருது பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62095).

மேலும் பார்க்க: 12017,12199,12649,12927,12938.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Vortragen

Content Eye Of Horus Online Gratis Spielen Automatenspiele and Spielautomaten Für nüsse Vortragen Tizona Kostenlos Aufführen Worin Besteht Ein Kontrast Unter Kostenlosen Slots Und Echtgeld