12339 – இந்து நாதம்: 1994.

கு.திவாகரன் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் இந்து மாணவர் மன்றம், 30.11.1994 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்திய கலைமகள் விழாவின்போது இவ்வாண்டு மலர் வெளியிடப்பட்டது. வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32283).

ஏனைய பதிவுகள்