தனபாலசுந்தரம் தமிழமுதன், குணரட்ணம் லக்ஷ்மன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால வீதி).
172 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வருடாந்தம் நடத்தும் ‘முத்தமிழ் விழா’ வின்போது வெளியிடப்பட்டுள்ள 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களின் மாதாந்த சஞ்சிகையான ‘தமிழ்ச்சுடர்’ ஆண்டுச் சிறப்பிதழாக இம்மலர் மாணவர்களின் தேர்ந்த ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44446).