12343 – இமயம் 2012-2013: கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு: கே.ஜே. என்ரர்பிரைசஸ்).

233 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

இமயம் ஆண்டுமலரின் மூன்றாவது இதழ் இதுவாகும். கல்லூரியின் பரிசளிப்பு விழாவுடன் இவ்விதழ் வெளிவருகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் இரகுவம்சம் (ஸ்ரீபிரசாந்தன்), சிலப்பதிகாரத்தில் கண்ணகி (க.இரகுபரன்), தலைமைத்துவம் (தனேஸ்வரி ரவீந்திரன்), செந்நெறி இலக்கியத்தில் நாட்டார் இலக்கியத்தின் பங்கு, பாசம்மிகு கதாபாத்திரம் இராமன், வாழ்க்கையை மேம்படுத்தும் மனித விழுமியங்கள் என்பன உள்ளிட்ட மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மலர் ஆசிரியர் குழுவில் கோதை நகுலராஜா, மே.கிருஷ்ணபிள்ளை, ச.பாஸ்கரன், சி.இராஜவரோதயம், சு.சிவரதன், எஸ்.பிரசாந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56903).

ஏனைய பதிவுகள்

13015 யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் பிரிவு யுயின் அனுசரணையில் வலம்புரி பத்திரிகையில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகளுக்கான சுட்டி: ஆவணி 2009-மார்கழி 2017.

நடராசா பிரபாகர், கல்பனா சந்திரசேகர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், இல. 84, கல்லூரி வீதி, நீராவியடி, 1வது பதிபபு, 2018. (அச்சகவிபரம் தரப்படவில்லை).(4), iv, 49 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: