12344 – இமயம் 2016: கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xlviii, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

19.01.1981இல் திருமதி ஜீ. புவனராஜன் அவர்களை முதலாவது அதிபராக வரித்துக்கொண்டு தன் கல்விப் பயணத்தை பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆரம்பித்தது. தொடர்ந்த தன் கல்விப் பயணத்தில் 09.12.1994 அன்று தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. இமயம் என்ற ஆண்டு மலரை வருடாந்த மலராக வெளியிட்டு வரும் இப்பாடசாலையினர் அதில் மாணாக்கர்களினதும் ஆசிரியர்களினதும் படைப்பாக்கங்களை பதிவுசெய்து அவர்களது எழுத்துத் துறைக்கு களம் அமைத்து வந்துள்ளனர். கல்லூரிப் புகைப்படங்கள், ஆசியுரைகளுடன், சங்கங்களின் அறிக்கைகளையும் ஆவணப்படுத்தி இவ்விதழ் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்