12345 – இளங்கதிர்: இதழ் 1 மலர் 3 (1950-1951).

அ.ரங்கநாதன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1951. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, சில்வர் ஸ்மித் வீதி). 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒ14 சமீ. ‘இளங்கதிர்” பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப் படும் வருடாந்த இதழ். இதன் வெளியீடு 1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருடந்தோறும் தொடர்ச்சியாக வெளிவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்குமான வெளியீட்டுக் களமாக இது விளங்குகின்றது. உள்ளடக்கத்தில் இலங்கையின் பல்லின பண்பாட்டு பாரம்பரியம், கலை பற்றிய ஆய்வுகள், இலக்கியப் படைப்புக்கள், விமர்சனங்களுடன் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுகளின் பதிவையும் தாங்கி வெளிவருகின்றது. இவ்விதழில் இளங்கதிர் இன்பம்: கவிதை (க.சு.நவநீத கிருஷ்ணபாரதி), முத்தமிழ் – ஆசிரியர் உரை (அ.ரங்கநாதன்), இலண்டனில் கீழைத்தேச மொழிக் கல்வி (க. வித்தியானந்தன்), நாயகன் (உமார் காயம்), சிங்கள மொழியில் தமிழ் மொழி (அ.சந்தியாப்பிள்ளை), தென் கிழக்கு ஆசியாவின் பொருளாதார முன்னேற்றம் (குமரேசன்), திராவிடமும் பாரதமும் (மு.கார்த்திகேசு), பெரிய புராணமும் தமிழ் மக்கள் மறுமலர்ச்சியும் (முருகவேள்), எமது சங்கம் (1950 1951) வில்லி ஒக்கும் வில்லி, விந்தை முதியோன் (க.கணபதிப்பிள்ளை), ஆனந்த நடனம் மாமலையும் மறைந்ததா?ஆகிய தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007980).

ஏனைய பதிவுகள்

Best A real income Ports On the web

Articles A guide to Legal Canadian Harbors And you can Gambling enterprises | free spin lightning link A real income Ports Better Gambling enterprises For