12348 இளங்கதிர்: 10ஆவது ஆண்டு மலர் (1957-1958). ஆ.வேலுப்பிள்ளை (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1958. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, சில்வர் ஸ்மித் வீதி).
(12), 179 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இவ்விதழில் கனவு நனவாகுமோ? என்ற ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் ஆசிரியர் உரையுடன் ஆக்கங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. ‘தமிழர் வரலாற்றுப் பரப்பிலே” என்ற பிரிவில் இராசராசனும் இராசேந்திரனும் (மணியம்), பல்லவ காவியம் (ஆனந்தன்), நாகரிகம் பரப்பிய தமிழன் (வேல்முருகு) ஆகிய ஆக்கங்களும், ‘சிறுகதைக் கொத்து” என்ற பிரிவில் சிறுவிழி குறுநகை (ஏ.பி.வி.கோமசு), சைக்கிள் சவாரி (மு.தளையசிங்கம்), காற்றோடு வந்தவன் (மு.கணேசசுந்தரம்), நச்சுக் கோப்பை (பாலன்) ஆகிய ஆக்கங்களும், ’கவிதைக் கோவை” என்ற பிரிவில், என் ஆசிரியன் (அமுது), தெய்வமே(மோ?) (க.கணபதிப்பிள்ளை), இன்பத் தமிழ் (சி. தில்லைநாதன்), வைகறை (க.கணபதிப்பிள்ளை) ஆகிய கவிதைகளும், ‘இலக்கியச்சோலை” என்ற பிரிவில், திருமாலை (மாலன்பன்), காரைக்காலம்மையாரும் தமிழிலக்கியமும் (வி.சிவசாமி), இலக்கியமும் சமுதாயமும் (கு.நாராயணசாமி), சிலப்பதிகாரமும் சங்க இலக்கியமும் (ச. தனஞ்செயராசசிங்கம்), பாரதி சபதம் (சு.வித்தியானந்தன்), கடலோசை (வி. செல்வநாயகம்) ஆகிய இலக்கியக் கட்டுரைகளும், ‘நவீன கலம்பகம்” என்ற பிரிவில், இசைக் கருவி (ஞானா சிவசுப்பிரமணியம்), நவீன கோவை (நாதன்), விஞ்ஞான முறையில் கொள்கைகளின் தோற்றம் (ஆ.வேலுப்பிள்ளை), தமிழில் வேர்ச் சொற்கள் (அ.சதாசிவம்),பொன்மொழிகள் ஆகிய ஆக்கங்களும், ‘ஈழத் தமிழகத்தில்” என்ற பிரிவில், நிலமும் வளமும் (கா.குலரத்தினம்), விடுதலையும் தமிழரும் (ஜெயரத்தினம் வில்சன்), சமயமும் கல்வியும் (சு.வித்தியானந்தன்), விஞ்ஞானமும் அகராதியும் (க.கணபதிப்பிள்ளை), இலக்கியமும் சிற்பமும் (கலைமகிழ்நன்), பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் – ஆண்டறிக்கை 1957 – 1958 என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007982).