ச.அடைக்கலமுத்து (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1959. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, சில்வர் ஸ்மித் வீதி).
(17), 196 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இவ்விதழில் ‘காற்றே கேள்” என்ற தலைப்பில் ச.அடைக்கலமுத்து (அமுதுப் புலவர்) அவர்களின் ஆசிரியர் உரையுடன் தொடங்கும் பதிவுகளில், ‘நாமிருக்கும் நாடு” என்ற முதலாவது பிரிவில், ஈழநாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்கள் (கா.இந்திரபாலா), ஈழநாட்டிலே கத்தோலிக்கமும் தமிழும் (சீ.அந்தோனிமுத்து), இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (எஸ்.அரசரத்தினம்), யாழ்ப்பாண நில அமைப்பும் நீர் ஊற்றும் (கா. குலரத்தினம்) ஆகிய ஆக்கங்களும், ‘இலக்கியச் சோலை” என்ற பிரிவில், கம்பன் காட்டும் வாலி (சி. தில்லைநாதன்), பக்திச் சுவை (சிவன்), கண்ணுற்றான் வாலி (வீ.செல்வநாயகம்), நாடகத் தமிழ் வளர்ச்சி (சு.வித்தியானந்தன்), கோவலன் – சோக நாடகத்தின் தலைவன் (ச. தனஞ்செயராசசிங்கம்) ஆகிய ஆக்கங்களும், ‘கவி அமுதம்” என்ற பிரிவில், இரவு (மறைமணி), கோப்பிக் குறள் (ஆனாமூனா), எங்கள் நாடு (அமுது) ஆகிய ஆக்கங்களும் ‘நகைச்சுவை” என்ற பிரிவில், திருடர்களும் சமூகமும் (சத்தியா), தம்பிக்கு (கலிங்கன்), நகைச்சுவைக் கட்டுரை: பாக்கு வெட்டி (அமுது) ஆகிய ஆக்கங்களும், ‘முத்துக் குவியல்” என்ற பிரிவில், விஞ்ஞானம் சமயத்தின் விரோதியா? (சீவன்), வராளி (ஞானா சிவசுப்பிரமணியம்), காரணம் சமாதானம் சாட்டு (ஆ.வேலுப்பிள்ளை), அறிஞர் எழுதிய கடிதங்கள், கருத்து மேடை, தமிழிற் பிறமொழிக் கலப்பு (சூ.குமாராசாமி சிவலிங்கம்), ஒரு சிறு நாடகம்: கரடி (க.செபரத்தினம்), புதிய உலகம்: ஒற்றுமை அமெரிக்கா (தனிநாயகம் அடிகள்), எழுது கருவிகள் (க.கணபதிப்பிள்ளை) ஆகிய ஆக்கங்களும், ‘சிறுகதைகள்” என்ற பிரிவில், சிறுகதை மலர்கள்-முன்னுரை, எதிர் பாராதது (M.I.H.அமீர்), வாழ்க்கைச் சுழலிலே (சி.தில்லைநாதன்), அர்ப்பணம் (பவானி ஆழ்வாப்பிள்ளை) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007983).