12352 – இளங்கதிர்: 14ஆவது ஆண்டு மலர் (1961-1962).

எஸ்.செபநேசன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1962. (மானிப்பாய்: அமெரிக்க இலங்கை மிஷன் அச்சகம்).

(9), 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

ஐயா, எழுத்தாளரே கொஞ்சம் நில்லும் (தலையங்கம்), நாடகம்: காதற்சிறை (செம்பியின் செல்வன்), வரலாற்று மாணவன் கண்ணில் குவெய்றொஸ் (க.அருமைநாயகம்), பேட்டிகளின் கதை (ஆசிரியர்), வாழும் வர்ணனைகள் 02: தண்ணீர்ப்பஞ்சம் (சுந்தர ராமசாமி), வான யாத்திரை (ஈழத்து குழுஉ இறையனார்), சிறு கதை எழுந்தது (எஸ். செபநேசன்), வாழும் வர்ணனைகள் 03: வியப்பு (கல்கி), சிறுகதை – மணிக்கொடிக் குழு (ஆ.வேலுப்பிள்ளை), வாழும் வர்ணனைகள் 04: காப்பொரேஷன் விளக்கு (புதுமைப்பித்தன்), ஈழநாட்டுச் சிறுகதையாசிரியர் (அம்பலத்தான்), சிறுகதை – தற்கால எழுத்தாளர் (முகம்மது ஜெமீல்), சங்கப் பாடல்களும் கிராமியப் பாடல்களும் (அ. சண்முகதாஸ்), வாழும் வர்ணனைகள் 05: சாலையோரம் (கு. ப. ரா.), மட்டக்களப்பு முஸ்லிம்களின் நாட்டுப் பாடல்கள் (ஏ.சி.எஸ்.அமீர் அலி), வழக்குஞ் செய்யுளும் (செல்வநாயகம்), வாழும் வர்ணனைகள் 06: வானம் (பாரதிதாசன்), நாடகத் தயாரிப்பு (சு.வித்தியாந்தன்), வாழும் வர்ணனைகள் 07: உணவு (பாரதியார்), நாடும் நாயன்மாரும்: பல்லவர்கால இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி (க.கைலாசபதி), வாழும் வர்ணனைகள் 08: வளையல் காரன் (லா.ச.ராமாமிர்தம்), தமிழும் பிறமொழியும் (சு.கணபதிப்பிள்ளை), வாழும் வர்ணனைகள் 09: யுகம் கண்ட தம்பதிகள் (கு.அழகிரிசாமி), கதை எழுதப் போகிறேன் (மணிமாறன்), பேரதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க ஆண்டறிக்கை, ஆகியவற்றுடன், பட்டப் பகல்தன்னில் பாவலர்க்குத் தோன்றுவது (எஸ்.மௌனகுரு), மலைக்குள் மாண்டிடவோ அவரிங்கு மனிதராகி வந்தார் (செ.யோகநாதன்), நானுந்தான் பார்த்துவிட்டேன் (செ.கதிர்காமநாதன்), மெய்க் காதல் (வ.கோவிந்தபிள்ளை), தமிழ்த் தாய் (இராசபாரதி) ஆகிய கவிதைகளும், மலரும் செடியும் (செ.யோகநாதன்), பரிகாரம் (க.குணராஜா), சலனம் (எஸ். மௌனகுரு), இரண்டாம் அத்தியாயம் (செ.பேரின்பாநாயகம்) ஆகிய சிறுகதைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008306).

ஏனைய பதிவுகள்

12291 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர்

(பகுதி 2). நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி). (12), 417-904 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,

12340 – இந்து மாருதம் 2016.

சி.மனோஜன், ர.சஷ்விந்த் (இணை இதழாசிரியர்கள்). கல்கிஸ்சை: இந்து மாணவர் மன்றம், பரி.தோமாவின் கல்லூரி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 116 பக்கம், புகைப்படங்கள், விலை:

12496 – முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு, சிங்கப்பூர் 1992.

இரா.மதிவாணன் (மலர்க்குழு சார்பாக). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 1992. (சென்னை: சுனிதா அச்சகம்). (4), 280 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தினால்

14749 எரிமலை: நாவல்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 208 பக்கம், விலை: ரூபா 600.,

14680 இறைவற்கொரு பச்சிலை: சிறுகதைத் தொகுதி.

வில்வம் பசுபதி. யாழ்ப்பாணம்: The Hindu Board of Education, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). iv, 98 பக்கம்,