12353 இளங்கதிர்: 17ஆவது ஆண்டு மலர் 1965/1966.

ஆ.சிவநேசச்செல்வன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1966. (கண்டி: ரா.மு.நாகலிங்கம், அதிபர், செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி).

(12), 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ.

இவ்விதழில், தூவுதும் மலரே (ஆசி. செல்வன்), ஆயிரங்காலத்துப் பயிர்(ஆசிரியர்), பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும் பல்கலைக் கழகத் தமிழ்த் சங்கமும் (நா. மயில்வாகனம்), பேச்சுத் தமிழில் இலக்கிய வழக்கு (ச.தனஞ்சயராசசிங்கம்), உவமையும் உருவாகமும் (வி.செல்வநாயகம்), மாதவையரின் பத்மாவதி சரித்திரம் குறையும் நிறையும் (சி.தில்லைநாதன்), வழூஉச்சொல்லென்பதறிகிலன் (சொ. சுந்தரமூர்த்தி), மனதற்ற நிலை (ஆ.வேலுப்பிள்ளை), மட்டக்களப்புத் தமிழிற் சிங்கள் வழக்கு (ம.சற்குணம்), தமிழ் வரலாற்றிற் பாரதிதாசன் (க.பி.முருகேசு), பிர்தவ்ஸியின் ஷா – நாமா (ஏ.சி.எல்.அமீர் அலி), ஏன் இந்த மாற்றம்? (குறிஞ்சிச் செல்வி), மணிவாசகரும் பக்திநெறியும் (சோ.செல்வநாயகம்), அகத்திணைக் கோவையிற் பாத்திர இயல்புகள் (ந.சோமசுந்தரம்), அகலிகை (மஹாகவி) ஆகிய கட்டுரைகளும், மார்கழிப்பாவை (மு.பொன்னம்பலம்), தலையணை விடு தூது (ஆசி.செல்வன்), மனவோட்டம் (சபா.ஜெயராசா), என்ன…? (சிதம்பரபத்தினி), கவிஞனானேன் (சி.சடாட்சர சண்முகதாஸ்), கண்கள் புரிந்துவிட்ட பாவம் (த.சி. நாதன்), நீயில்லா வாழ்வும் வாழ்வோ (வ.கோவிந்தபிள்ளை), மனிதா மனத்திரை திறப்பாய் (மு.த.சிவச்செல்வன்), அமுதாய் இனிப்பதனால் … (சி.பற்குணம்) ஆகிய கவிதைகளும், உருவகக்கதையான குறுக்கீடு (குந்தவை) மற்றும் சங்கத்தின் அறிக்கைகளாக நாம் இட்டுச் சென்ற பாதை … (பொ.அருந்தவநாதன்), நன்றி மறப்பது நன்றன்று (ஆசிரியர்), 1965 – 66 சிறப்பு நிகழ்ச்சிகள், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினர் நடித்த இராவணேசன் (வடமோடிக் கூத்து: தயாரிப்பு-கலாநிதி சு. வித்தியானந்தன்) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37412)

ஏனைய பதிவுகள்

Stan James Mobile Wagering Software

Blogs How to make Deposits And Withdrawals During the Casinos on the internet British Greatest Casinos on the internet To possess Ports #12 Which In