12354 – இளங்கதிர்: 19ஆவது ஆண்டு மலர் (1967-1968).

12354 இளங்கதிர்: 19ஆவது ஆண்டு மலர் (1967-1968). ஆ.பாலேந்திரன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1968. (கொழும்பு 13: இரஞ்சனா அச்சகம், 98, விவேகானந்தர் மேடு). (32),

166 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ.

அமரர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (அஞ்சலி), உலகத் தமிழ் மகாநாடு, ஞானப்பிரகாச சுவாமிகள் (வி. செல்வநாயகம்), இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் கனிப்பொருள் வளமும் பொருளாதார விருத்தியும் (சோமசுந்தரம் செல்வநாயகம்), யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் சொல்லும் பொருளும் (ச.தனஞ்சயராசசிங்கம்), தீபவங்ஸ நூல் (க. இந்திரபாலா), திருநூற்றந்தாதி (ஆ.வேலுப்பிள்ளை), காதலும் கட்டுப்பாடும் (க.கைலாசபதி), ஆங்கில அரசாங்கமும் சைவ சமயக் கல்வியும்: 19ஆம் நூற்றாண்டு (க.அருமைநாயகம்), பூட்டோரிக்கோவின் மொழிப் பிரச்சினை (ப.சந்திரசேகரம்), நல்ல மாறுதல் (மு.வை.அரவிந்தன்), கோல்புறூக் கமறன் சீர்திருத்தங்கள்: ஒரு மதிப்பீடு (ச.நாகேந்திரன்), பாரதியின் நகைச்சுவை (சு.சண்முகம்), திருவாசகத்தின் உட்கிடை (சி.இராமலிங்கம்), முச்சங்கங்கள் பற்றிய உண்மை (ம.சற்குணம்), பெரியாழ்வாரின் உண்மை அனுபவம் (செல்வி புவனா குமாரசாமி), தோட்டத் தொழிலாளர்: ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம் (எம்.வாமதேவன்), இலக்கியத்தின் இலக்கணம் (ஈரோடு மே.து.ரா.), அம்மையாரின் பக்தி ஊற்று (செ.சயனொளிபவன்), பாரதியின் யுகப்புரட்சி (மு.சின்னத்துரை), பொய்கையார் சொன்மாலை (நா.சுப்பிரமணிய ஐயர்), பாடல் நின்றது (ஈழத்துச் சிவானந்தன்), திராவிடர் என்னும் பெயரும் தற்கால ஆராய்ச்சியும் (சுப்பிரமணியம் தவராசா), எம்மிடையேயுள்ள எழுத்தாளர்கள் (இரா.சிவச்சந்திரன்), பள்ளி எழுச்சிப் பாட்டின் வளர்ச்சி (சு.வைகுந்தநாதன்), மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலே சிதைந்த வழக்குகள் (இ.பாலசுந்தரம்), மனக்கோணல் (சரநாதன்), தமிழ்ச் சங்கத்தாரால் நடாத்தப்பட்ட சுற்றுலாக் காட்சிகள், இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டின் போது நிறுவப்பட்ட சிலைகள் சில: முத்தமிழ் விழாவில் பேராசிரியர், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையும் இலங்கைப் பல்கலைக் கழகமும் (சு.வித்தியானந்தன்), தமிழும் பிறமொழியும் (க.கணபதிப்பிள்ளை), அன்றும் இன்றும் (க. கணபதிப்பிள்ளை), எம்மிடையில் (நா.சுப்பிரமணியம்), இலங்கையிற் கண்ணகி வழிபாடு (க.கணபதிப்பிள்ளை) ஆகிய படைப்பாக்கங்களும், சுவைத்து முடியவில்லை (திலீபன்), இன்ப வீடு (சி.கிருஷ்ணபிள்ளை), கண்ணாடி காட்டுமா (வயிரமுத்து), வண்டும் மலரும் (வயிரமுத்து) ஆகிய கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 011264).

ஏனைய பதிவுகள்

16745 கானல் நீர் (நாவல்).

சியாமளா யோகேஸ்வரன். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 271 பக்கம், சித்திரங்கள், விலை:

Tragamonedas De balde En internet

Content Camino Individuo: Recepción Nuestra Museo Sobre Tragamonedas Gratuito: Casino Live 7 Sultans Sus particulares De su Máquina Tragaperras Cleopatras Code Aprende Cualquier Una Colección