12355 – இளங்கதிர்: 26ஆவது ஆண்டு மலர் 1991/1992.

த.தவவதனி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (கண்டி: சென்ட்ரல் பிரின்டர்ஸ், 98, டி.எஸ்.சேனநாயக்க வீதி).

XVI, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*18.5 சமீ.

இவ்விதழில் இலங்கைப் பல்கலைக்கழகங்களும் இலக்கியத் திறனாய்வும் (துரை. மனோகரன்), தமிழின் சிறப்பெழுத்துக்கள் (சி.சிவசேகரம்), தனியார் மயமாக்கமும் குறைவிருத்தி நாடுகளும், ‘கீத கோவிந்தம்” பாடல்களை விளக்கும் ராசபுத்திர ஓவியங்கள் (ந.வேல்முருகு), இருண்ட யுகத்திலிருது விடியலுக்கு…(ந.இரவீந்திரன்), பல்கலைக் கழகங்களில், ‘பகிடிவதை” எனப்படுவது ஒரு மரபா? அது தவிர்க்க முடியாத ஒன்றா? (றமீஸ் அப்துல்லா), இசையில் பரிணாமம் (ப.சுசித்திரா), ‘மூட்டத்தினுள்ளே” (நாவல்): ஒரு நோக்கு (க.அருணாசலம்), பேராதனைப் பல்கலைக்கழகம் அன்றும்… இன்றும்… – (வ.நந்தகுமார்), இலங்கைவாழ் மலையகத் தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினார்? (அம்பலவாணர் சிவராஜா), மாரடைப்பும் மனித வாழ்வும் சில காரணிகள் பற்றிய ஆய்வு (இரா. சிவகணேசன்), மார்க்ஸிய மெய்யியலில் அந்நியமாதல் எண்ணக்கருவும் ஒழுக்கவியல் அடிப்படையும் (எம்.எஸ்.எம்.அனஸ்), இலக்கியத்திலிருந்து… வஞ்சிமாநகரமும் வஞ்சியும் (ஊர்க் குருவி), பனை: மறைந்து கிடக்கும் அளவற்ற அபரிமித பொருளாதார வளம் ஒன்று, தொகுத்துப் பார்க்கும் போது துயரவரலாறு சொல்லும் மலையக நாவல்கள் (சு.முரளிதரன்) ஆகிய கட்டுரைகளும், வாய்ச் சொல்லில் வீரரடி (மரினா இல்யாஸ்), நட்பு (க.இரமணீதரன்), இலையுதிர்கால வசதங்கள் (மு.விஜேந்திரா), அந்திநேரத்து பூபாளம் (சூரியதாசன்) ஆகிய சிறுகதைகளும், அட்டைப் படக் கவிதை, இளங்கதிர் நீ வாழி, உரமிட்டு… உதைபட்டு… (என்.தாரணி), அடிமைச்சுவடுகள் (ஏ.சிவேந்திரா), மனிதா உன்னிடம் ஓர் யாசிப்பு (அருந்ததி சங்கரதாஸ்) தன்னம்பிக்கைக்கு (யுடிநசவ ர்நிpயசவ)இ சுதந்திரம் (இராஜேஷ் இராஜரத்தினம்), வதந்திகள் (மாத்தளை ரிஸ்வான்), மழை (எஸ். கருணானந்தராஜா), வெப்ப வசந்தங்கள் (கநா), சிரி(நெரு)ப்பு (எம்.ராஜன் நசூர்தீன்), ஒவ்வாத படிமங்கள் (ஏ.எச்.எம்.நவாஷ்), எதிர்காலம் (த.றொஷான்), குழந்தாய் ஏன் அழுகிறாய்….? (எஸ்.எல்.பலாஹ{தீன்), மறந்து விடாதே (மரீனா இல்யாஸ்) ஆகிய கவிதைப்படைப்புகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24120)

ஏனைய பதிவுகள்

Online Spor Bahisleri Şirketi Ve Casin

Online Spor Bahisleri Şirketi Ve Casino Mostbet Türkiye Çevrimiçi Kumarhane Mostbet Casino Content Mostbet Hesabınıza Nasıl Giriş Yapılır? Amerikan Futbolu Mostbet Çevrimiçi Spor Bahisleri Mostbet