12356 – இளங்கதிர்: 27ஆவது ஆண்டு மலர் 1992-1993.

எஸ்.வை.ஸ்ரீதர் (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (கண்டி: செனித் அச்சகம், 192, தொட்டுகொடல்ல வீதி).

xviii, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*18.5 சமீ.

இவ்விதழில் தமிழ்ச் சங்கக் கீதம் (சக்திதாசன்), வாழ்த்துரைகள், தமிழ்ச் சங்கச் செயற்குழு 1992/93 அறிக்கைகளுடன் ஓ … தென்றலே (எஸ்.வை.ஸ்ரீதர்), மௌனராகம் (எம்.ராஜன் நசூர்தீன்), மனிதா உன்னைத்தான் (ரஷீத் எம்.றியாழ்), முடிவுரையும் முன்னுரையும் (வே.இராஜகோபாலசிங்கம்), வழி பிறக்காதா …? (இ.ஸ்ரீதர்), அண்ணனுக்கு ஓர் அஞ்சல் (மரீனா இல்யாஸ்), உரமாகிப் போனது (கே.எம்.அப்துஸ் ஸமது), சமநிலை உணர்ந்து சமன் செய்து கொண்டு (வு.ஏ.சு.சங்கர்), காத்தல் (இரா.இரவிசங்கர்), ஒரே ஒரு முறை மட்டும் …(செல்வி ந.தாரணி), இயற்கை அளிக்கும் ரகம், இதயம் களிக்கும் சுகம் (எம்.வை.எம்.அலி), மனு நீதி (பீற்றர் ரஞ்சித்) ஆகிய கவிதைகளும், பாதை மாறிய பயணங்கள் (மு.விஜேந்திரா), சொந்தங்கள் சுமையானபோது (செல்வி மரீனா இல்யாஸ்), இன்னொரு ஜனனம் (செல்வி என். தாரணி) ஆகிய சிறுகதைகளும், பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் (1926 – 1993): ஒரு வரலாற்று நோக்கு (கலாநிதி க. அருணாசலம்), பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள் (கலாநிதி துரை மனோகரன்), சிங்கள நாடகமரபில் ‘கலைப்பாணி”யின் செல்வாக்கு (ஜனாப். எம்.எஸ்.எம். அனஸ்), விபுலாநந்த அடிகளாரின் மானிட நோக்கு (சி.தில்லைநாதன்), இலங்கையில் தமிழ்த் தேசிய வாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (அம்பலவாணர் சிவராஜா), குறை விருத்தியும் குறைந்த வாழ்க்கைத் தரத்தின் பரிமாணங்களும் (மா.செ.மூக்கையா), குருதி அழுத்த அதிகரிப்பிற்கான காரணிகள் (கலாநிதி இரா. சிவகணேசன்),வாசகரின் நடுநிலைப்போக்கு (எம்.ஏ.அப்துல் சக்காப்), ‘எயிட்ஸ்” மனித உலகுக்கு ஒரு சவால் (எஸ்.ஜெயசீலன்), கிராம அபிவிருத்தியும் அதில் கிராம மக்களின் பங்களிப்பும் (நல்லதம்பி நல்லராஜா), கணனிகளே வாழ்க்கையாக (செல்வன் மு.தாரகன்), இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறை தீர்வாகுமா? (எம்.அப்துல் நாஹிப்), மஹாமேதை கலாயோகி ஆனந்தகுமார சுவாமியின் கலை மெய்யியல் பற்றிய ஓர் சிறு நோக்கு (கே.கணேசராஜா), பெண்நிலை வாதமும் மகளிர் நிலைப்பாடும் (நல்லதம்பி நல்லராஜா), கீழைத்தேய கலை, அழகியல் மெய்யியலில் இந்தியாவின் பங்களிப்பு: ஓர் அறிமுகம் (பீ.எம். ஜமாஹிர்), குறள் கூறும் நவீன மருத்துவம் (ஸ்ரீதரன் ஜெயரட்ணம்), வளி மாசடைதல்: காரணிங்களும் விளைவுகளும் (வை.நந்தகுமார்), பழந்தமிழ் இலக்கியத்தில் அங்கத மரபுகள் (பொ.பூலோகசிங்கம்), பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றி (சி.தில்லைநாதன்), பதிவு நவிற்சி ஓவியங்கள் (ந.வேல்முருகு) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13699. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008308).

ஏனைய பதிவுகள்

Cleopatra Tragaperras

Content Tragamonedas Similares This Sitio web Uses Cookies Gano cualquier es cualquier casino online en donde se podrí¡ pagar con manga larga Mercado Pago, débito,