12358 – இளங்கதிர்: 29ஆவது ஆண்டு மலர் 1994-1995.

H.M.கலால்தீன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1995. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

(20), 111 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இவ்விதழில் மானுடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் (க.அருணாசலம்), தன்னிகரில்லாத் தலைவர்களும் தமிழ்ப்படக் கதாநாயகர்களும் (துரை. மனோகரன்), புதுமைகளும் மாறுதல்களும் (சி. தில்லைநாதன்), தம்பி (சேந்தன்), கவிஞர்களின் கரங்களில் கூரிய வாள் ஹைக்கூ, திருக்கோணமலை மாவட்ட நாட்டாரியலில் காணப்படும் காதல் சுவை (ர்.ஆ.கலால்தீன்), சூரிய வெளியும் இனிச் சுகம்தான் (பா.பிரதீபன்), இலங்கை அரசியலில் சாதிச் செல்வாக்கும் அதன் தாக்கமும் (ஆ.ஐ.ஆ. நஸார்), காதல் ஓர் அலசல் (ந.சுரேந்திரன்), கிழக்கு மாகாணத் தமிழ் – முஸ்லீம் இனமுரண்பாட்டின் காரணங்களும் ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கான சில ஆலோசனைகளும் (ஐ.டு.அப்துல் நசார்), கதகளி – கேரளத்தின் தேசியக் கலை வடிவம் (அம்பிகை வேல்முருகு), மனித வாழ்வில் இரும்புச் சத்தின் முக்கியத்துவம் (இரா. சிவகணேசன்), இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு (ஆ.யு.ஆ.பைசல்), அவைக்காற்றுகையில் அனுபவத்தின் ஊடாக ஒரு நாடகத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் (சங்கர்), மகாத்மாவின் வாழ்வும் அவரது சிந்தனைகளும் (யு.டு.முகம்மட் றியால்), ஊனங்கள் (மு. விஜேந்திரா), செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்குதல் (யே.யோக்கியம்), வறுமை ஒழிப்பில் சமூர்த்தித் திட்டத்தின் பங்கு (சு.றிஸ்வான் முகமட்), மார்கழித் திருவாதிரை நோன்பும் திருவெம்பாவையும் (கெ.கிருஷ்ணவேணி), நாடகவிழா – 95: சாதாரண ரசிகன் என்ற கோணத்திலிருந்து … (சி. சிவானந்தன்), வதனமார் வழிபாடு (இரா.வை.கனகரத்தினம்), விஞ்ஞான வளர்ச்சியில் கணனியின் அவதாரம் (சிவசண்முகம் சுதாகரன்), அவன் வருவான் (இ.ஸ்ரீதர்), மனித ஆளுமை பற்றிய பிரச்சனைகளும் பிராய்டிய விளக்கமும் (பீ. எம்.ஜமாஹிர்), தண்டனைக் கோட்பாடுகளும் அதில் காணப்படும் பிரச்சினைகளும் (எம். ஐ.அப்துல் மஜீட்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கவிதைகளின் பிரிவில் நலமுடன் வாழ்க இளங்கதிரே (ஆ.லு.ஆ.அலி), சமாதானமே ஓடி வா (றஹீம் எஸ். எம்), என் கறுப்பு டயறி (எம்.விஜிலி), இதுவா நிதர்சனம்? (இரா.நித்தியாந்தன்), புது வாழ்வு மலரட்டும் (செல்வி சந்திரவதனி ஐயனார்), போதனை (செல்வி ஞானம்பிகை விஸ்வநாதன்), பிரிகின்ற நேரமும் பின்வரும் காலமும் (வே.இராஜகோபாலசிங்கம்), பட்டதாரியின் துயர் (யு.டு.ஆ.கைஸ்சர்), அகதிகளாய் (கோ.சுரேஷ்), மலையக மைந்தரே (செல்வி சுமைரா அன்வர்) ஆகிய கவிதைப் படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18823, 14801).

ஏனைய பதிவுகள்

Nya Casinon

Content Ta en titt på hemsidan – Online Casino Reviews Recension Av Stone Gaze Of Medusa Snarlika Casinon Baksida av underben Genom Tittar Postum I