12359 – இளங்கதிர் : 30ஆவது ஆணடு மலர் ; 1996-1997.

இராசரத்தினம் இரவிசங்கர் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1997. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

(16), 148 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19சமீ.

முதற் பகுதியான ‘சமூக கலை இலக்கிய அறிவியற் பகுதியில்” எல்லாமே போலிகள! (வைத்திய கலாநிதி தி.ஆனந்தமூர்த்தி), மட்டக்களப்பும் தமிழர்களும்- ஓர் நோக்கு (சிவசண்முகன் சுதாகரன்), இனிவரும் தசாப்தம் என்ன கொண்டு வரும்? (பா.மணிமாறன்), 1970களில் ஈழத்தின் இலக்கியப்போக்கு: சிறப்பாக நாவல் இலக்கியம் இக்காலப்பகுதியில் கொண்டிருந்த பிரதான பண்பு (உமா. கிருஷ்ணசாமி), தமிழுக்கும் கணனிக்கும் பாலமமைப்போம் (வே.ஏ.மனோராஜ்), பத்திரிகைத்துறை ஒரு வெட்டுமுகம் (எம்.என்.என்.நவ்ரஜி), பித்தன் கே.எம்.ஷா கவிதைகளிற் சமூக நோக்கு (தா.மணிமேகலா), இன்ரநெற்றும் தமிழும் (து.வசீகரன்), உயிரியல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் (சுரேந்திரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியான ‘இளைய தலைமுறைச் சிறப்புப் பகுதியில்” இளைஞர் பண்பாடு சில குறிப்புகள் (கார்த்திகேசு சிவத்தம்பி), இளைய தலைமுறையினரும் கலை இலக்கிய ஈடுபாடும் (க. அருணாசலம்), தலைமுறை முரண்பாடு (சி. தில்லைநாதன்), போதையின் பிடிக்குள் எமது நாடு (ருஸ்னா ராகுக்), விழுமியங்களின் பொதுமையும் மெய்யியலும் (திருமதி மல்லிகா இராஜரத்தினம்), இலங்கையில் இளைஞர் அமைதியின்மைக்கான காரணங்கள் பற்றியதொரு ஆரம்ப உசாவல் (பேராசிரியர் அம்பலவாணர்), பல்கலைக்கழக மாணவர்களின் அமைதியைக் குலைக்கும் புல்லுருவிகள் (வை. நந்தகுமார்), தற்கொலையின் ஆரம்பங்கள் (பேராசிரியர் டியூடர் சில்வா), காலம் உனக்கொரு வாழ்வு தரும் (றமேஷ் அலோஷியஸ்), உளவியல் நோக்கில் இளையோர் பிரச்சினைகள் (எம்.எஸ்.எம்.அனஸ்) ஆகிய கட்டுரைகளும், விடை காணா வினா (அனுஷா பாலேந்திரன்), அவள் தாயாகிறாள் (ந.சந்திரிகா), பார்வதி ஒரு பாடம் (சி.கருணாகரன்), கொலைகள் (சூசை அந்தனிதாசன்), கனவு சிதைந்ததொரு வாழ்வு (ப.பீரதீபன்) ஆகிய சிறுகதைகளும், வண்டித்தடம் (யோ.அன்ரனியூட்), எட்டத் தொலைவிலிருந்தோர் கீதம் (முகமூடி), என்னை நான் மீட்க (ஏ.குபேரன்), தணியுமா சுதந்திர தாகம் (கோமதி கிருஷ்ணசாமி), நான் அகதியாயிருக்கலாம் (என்.எஸ்.பி.கரன்), அகதி (எம். எச்.ஜெய்புன்நிஸா) ஆகிய கவிதைகளும், பெண்ணியம்: தெளிவை நோக்கிய ஒரு முயற்சி (தொகுப்பு: பா.பிரதாபன், இரா. இரவிசங்கர்), இவர்கள் பார்வையில் (நேர்கண்டு தொகுத்தவர் இரா. இரவிசங்கர்), கல்வியியல் பேராசிரியருடன் ஒரு நேர்காணல் (தொகுப்பு: மா.அன்புதாஸ்) ஆகிய நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. இறுதப்பிரிவில் ‘சங்க நிகழ்வுகளுடன் ஓர் சங்கமம்“ என்ற பிரிவில் தமிழ்ச்சங்கச் செய்திகளும், அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழ் நாட்டுக்கூத்து மரபை ஆராய்ந்தே ‘மனமே” நாடகம் எழுதப்பட்டது (மறைந்த பேராசிரியர் பி.ஆர்.சரச்சந்திர), நாடகப் பட்டறையும் அதன் எதிரொலிகளும் (சூ.அன்ரனிதாசன்), கவிதை பற்றிக் கதைப்போம் வாருங்கள் (தொகுப்பு: சுமைரா அன்வர், கிருபால் சரவணமுத்து), இலங்கையில் தமிழ்- முஸ்லிம் உறவு (தொகுப்பு: சி. சுதாகரன்) ஆகிய படைப்பாக்கங்களும் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18870. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008311).

ஏனைய பதிவுகள்