12362 – இளங்கதிர்: 33ஆவது ஆண்டு மலர் ; 1999/2000.

12362 இளங்கதிர் ;: 33ஆவது ஆண்டு மலர் ; 1999/2000. வேலாயுதம் முருகதாசன், மதுராந்தகி சின்னத்தம்பி (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2000. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

(12), 147 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: : 26×20 சமீ.

தமிழ்ச் சங்கக் கீதம் (சக்திதாசன்), மனவெழுச்சிகளும் (நுஅழவழைளெ) அவை மனித நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கமும் (எம்.ஐ.அப்துல் மஜீட்), 1940 வரை இலங்கைத் தமிழ்க் கவிதை மரபு பற்றிய ஒரு நோக்கு (செ.செல்வமோகன்), காளிதாசனின் இருதுசம்ஹாரன் – மழைக்கால வர்ணனை (க.ஆனந்தகுமார்), இலங்கையின் அரசியலில் பெண்கள் (எச்.எம்.எம்.றைஹான்), பாரதியும் விஞ்ஞானமும் (அ.மு.றியாஸ் அஹ்மட்), நாவலரின் ‘கொன்றைவேந்தன்” உரைவளம் (இரா. வை.கனகரத்தினம்), இப்படியும் ஒரு பெண்ணா எஸ்.பொ. வின் இரு கதைத் தலைவர்கள் (துரை மனோகரன்), தமிழிலக்கியப் பரப்பில் ஈழத்து நவீன கவிதை (செ.யோகராசா), பொருளாதார அபிவிருத்தியிலிருந்து மானிட அபிவிருத்தியை நோக்கி (எம்.ஐ.பஸீஹா), தோழி நீ வாழி (இரா.சர்மிளாதேவி), துளிர்க்கிறது ஓர் உறவு (சிறுகதை- வல்லிபுரம் சுகந்தன்), கனகம்மாள் காத்திருக்கிறாள் (சிறுகதை-க. மயூரதி) ஆகிய படைப்பாக்கங்களுடன், முடிவின் தொடக்கத்தில் …. (சி.பத்மசீலன்), விடிவுக்காய் பல்கலையில் … (இ.ஜனந்தன்), அதர்மத்தில் ஓர் ஆய்வு (ஆர். சண்முகப்பிரியா), விழுமியமும் விழிக்கட்டும் (என்.சுதன்), அம்மா (சி.தெ.ஞானக்குமரன்), நான் விற்கப்படுகின்றேன் (வல்லிபுரன் சுகந்தன்), சினேகம் … (யோ.அன்ரனி), மிலேனியம் மிகுந்துரைக்காதோ (கோமதி கிருஷ்ணசாமி), எல்லோருக்கும் நல்லவனாக …. (அ.அலங்கேஸ்வரன்), நெஞ்சு பொறுக்குதில்லையே (நா.மணிமேகலா), பிரிவு (கவிப்பிரியன்), நான் உலகை விரும்பியது நேற்று … இன்று … ஆனால் நாளை? (இ.ஜனந்தன்), தாய் (றொசான் ச. றாகல்), இதய இராகம் (கருணாகரன்), தேடல் (வ.ஜெயரூபன்), காதல் கூடுதல் (சு.வில்வரெத்தினம்), கடந்து செல்தல் (சு.வில்வரெத்தினம்), பண்பாடு (சு.வில்வரெத்தினத்தினம்), விதைப்பு (நிலவின்தாசன்), கனவு போனது (வேலையா சதீஸ்குமார்), அறிவுச்சட்டை அணிந்த சாத்தான்களும் அழுகை அழியாத அவலமும் (ஸ்ரீ பிரசாந்தன்), அகதி எம் அவலங்கள் (எ.எ.அஷ்ரப்), உலகினை ஐக்கியப்படுத்துவோம் (லறீனா அப்துல் ஹக்) ஆகிய கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து சங்க நடவடிக்கைகள், நூல் விமர்சனங்கள், நேர்காணல்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. அவை தமிழ்த் தகவற் துறை பற்றிய சில தகவல்கள் (சி. சிவசேகரம்), நம் தமிழர் வாழ்வும் – தமிழ் சினிமாவும் (தி.மகேஸ்வரராஜா), பௌத்தர்கள் என்றால் சிங்களவர் என்ற தப்பான கருத்து (பூ.ம.செல்லத்துரைதினக்குரல்), இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையும் ‘பாலியல் வல்லுறவும்”, பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகள்: ஒரு பகுப்பாய்வு (அம்பலவாணர் சிவராஜா), வீரம் செறிந்த வன்னியில் தேடல்கள் (யோகநாதன் திலீபன்), பேராசிரியர் எஸ். இரட்னஜீவன் கூலுடனான ஒரு நேர்காணல் – தொகுப்பு: கு.சிவசுதன்), பேட்டி: வவுனியா அகதிமுகாம் (இளங்கதிர் சார்பில் பேட்டி கண்டவர்: ம. அமுதராஜ்), சகோதர இன மக்களுடனான ஒரு நேர்காணல் – ம.அமுதராஜ் (பதவியா அகதிகள் முகாம்) ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40789. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008314).

ஏனைய பதிவுகள்

450 Premie, 250 Gratis Spins

Capaciteit Zeker vogel pro Free Spins Kloosterzuster Deposito om Belgi Enig bestaan een 20 free spins kloosterlinge deposito bonus Waarom leveren gokhuis’su eentje non deposito

Mustang Money Slot

Blogs Type of Slot machines From the Vegasslots Net Top 100 percent free Online casino games Development Your own Slot Game Approach How can Online